தேசிய செய்திகள்

இந்திய விண்வெளித்துறையில் முதலீடு செய்ய வெளிநாட்டு நிறுவனங்கள் ஆர்வம்: இஸ்ரோ தலைவர் + "||" + Lot of interest from foreign companies to invest in India's space sector: ISRO

இந்திய விண்வெளித்துறையில் முதலீடு செய்ய வெளிநாட்டு நிறுவனங்கள் ஆர்வம்: இஸ்ரோ தலைவர்

இந்திய விண்வெளித்துறையில் முதலீடு செய்ய வெளிநாட்டு நிறுவனங்கள் ஆர்வம்: இஸ்ரோ தலைவர்
இந்திய தொழில் கூட்டமைப்பு, ஆன்ட்ரிக்ஸ், இஸ்ரோ, என்.எஸ்.ஐ.எல். ஆகியவை சார்பில் சார்பில் விண்வெளி தொடர்பான சர்வதேச விண்வெளி மாநாடு மற்றும் கண்காட்சி டிஜிட்டல் முறையில் நேற்று நடைபெற்றது.
இதில் இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) தலைவர் கே.சிவன் கலந்து கொண்டு பேசியதாவது:-

இந்தியாவில் விண்வெளித்துறையில் இந்திய நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றவும், முதலீடு செய்யவும் வெளிநாட்டு நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன. எங்களின் விண்வெளி தொடர்பான அன்னிய நேரடி முதலீட்டு கொள்கையை திருத்தி அமைக்கிறோம். இந்த திருத்திய கொள்கை, வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய அதிக வாய்ப்புகள் ஏற்படுத்தி கொடுக்கும். இது இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் இடையே ஒரு நிலையான தொடர்பை ஏற்படுத்தும். 40 தனியார் துறை நிறுவனங்களுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

இவ்வாறு கே.சிவன் பேசினார்.