தேசிய செய்திகள்

தேசிய கம்பெனி சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்துக்கு பொறுப்பு தலைவராக நீதிபதி வேணுகோபால் நியமனம் + "||" + NCLAT gets third Acting Chairperson in a row

தேசிய கம்பெனி சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்துக்கு பொறுப்பு தலைவராக நீதிபதி வேணுகோபால் நியமனம்

தேசிய கம்பெனி சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்துக்கு பொறுப்பு தலைவராக நீதிபதி வேணுகோபால் நியமனம்
தேசிய கம்பெனி சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பயத்தின் (என்.சி.எல்.ஏ.டி.) தலைவராக இருந்த நீதிபதி முகோபாத்யாயா கடந்த ஆண்டு மார்ச் 14-ந்தேதி ஓய்வு பெற்றார்.
அதைத்தொடர்ந்து நீதிபதிகள் பன்சிலால் பட், சீமா ஆகியோர் அடுத்தடுத்து பொறுப்பு தலைவர்களாக நியமிக்கப்பட்டனர். இதில் நீதிபதி சீமாவின் பதவிக்காலம் கடந்த 10-ந்தேதி நிறைவடைந்தது. எனவே இந்த தீர்ப்பாயத்தின் புதிய பொறுப்பு தலைவராக நீதிபதி வேணுகோபால் நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார்.

மத்திய அரசின் பல்வேறு தீர்ப்பாயங்களில் 250-க்கு மேற்பட்ட காலியிடங்கள் உள்ளன. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து இருந்தது.அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் 2 தீர்ப்பாயங்களுக்கு 31 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். தற்போது என்.சி.எல்.ஏ.டி.க்கு பொறுப்பு தலைவர் நேற்று நியமனம் செய்யப்பட்டு உள்ளார். எனினும் முக்கிய தீர்ப்பாயங்களில் ஒன்றான என்.சி.எல்.ஏ.டி.க்கு கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து நிரந்தர தலைவர் இல்லாமல் 3-வது முறையாகவும் பொறுப்பு தலைவரையே நியமித்திருப்பது குறிப்பிடத்தக்கது.