தேசிய செய்திகள்

ஹெலிகாப்டர் பேர ஊழலில் சிக்கிய ராஜீவ் சக்சேனா, வங்கி கடன் மோசடியில் கைது + "||" + VVIP choppers deal accused Rajiv Saxena arrested by ED in money laundering case

ஹெலிகாப்டர் பேர ஊழலில் சிக்கிய ராஜீவ் சக்சேனா, வங்கி கடன் மோசடியில் கைது

ஹெலிகாப்டர் பேர ஊழலில் சிக்கிய ராஜீவ் சக்சேனா, வங்கி கடன் மோசடியில் கைது
இடைத்தரகர் ராஜீவ் சக்சேனா துபாயில் இருந்து இந்தியாவுக்கு கடந்த 2019-ம் ஆண்டு நாடு கடத்தப்பட்டார். காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பயணம் செய்வதற்காக ரூ.3,600 கோடியில் ஹெலிகாப்டர்கள் வாங்க முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் இதில் மிகப்பெரும் ஊழல் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டதால் இந்த ஒப்பந்தம் 2014-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. இந்த முறைகேடு வழக்கில் சிக்கிய இடைத்தரகர் ராஜீவ் சக்சேனா துபாயில் இருந்து இந்தியாவுக்கு கடந்த 2019-ம் ஆண்டு நாடு கடத்தப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளார்.

மேட்ரிக்ஸ் குழும நிறுவனங்கள் என்ற பெயரில் பல்வேறு நிறுவனங்களை துபாயில் நடத்தி வந்த இவர், ஹவாலா தரகராகவும் இருந்துள்ளார். இவர் மீது மொசர்பேர் வங்கி கடன் மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. இதில் நேற்று அவர் கைது செய்யப்பட்டார். டெல்லியில் உள்ள கோர்ட்டு ஒன்றில் அவரை ஆஜர்படுத்தி காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.