தேசிய செய்திகள்

காஷ்மீரில் என்கவுண்ட்டர்; அடையாளம் தெரியாத பயங்கரவாதி சுட்டு கொலை + "||" + Encounter in Kashmir; Unidentified terrorist shot dead

காஷ்மீரில் என்கவுண்ட்டர்; அடையாளம் தெரியாத பயங்கரவாதி சுட்டு கொலை

காஷ்மீரில் என்கவுண்ட்டர்; அடையாளம் தெரியாத பயங்கரவாதி சுட்டு கொலை
காஷ்மீரில் நடந்த என்கவுண்ட்டரில் அடையாளம் தெரியாத பயங்கரவாதியை படையினர் சுட்டு கொன்றனர்.
ரஜோரி,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் காம்பீர் முக்லான் பகுதியில் ராணுவம் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து கூட்டு நடவடிக்கையாக பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதில், பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் படையினரை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டனர்.  இதனை தொடர்ந்து, படையினரும் பதிலடி கொடுத்தனர்.  இந்த என்கவுண்ட்டரில் அடையாளம் தெரியாத பயங்கரவாதியை படையினர் சுட்டு கொன்றனர்.

ஏ.கே.-47 ரக துப்பாக்கி மற்றும் 32 சுற்றுகள் கொண்ட தோட்டாக்கள் மற்றும் ஒரு கையெறி குண்டு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.  இதுபற்றி ஆயுத சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.  விசாரணையும் நடந்து வருகிறது.  தொடர்ந்து தேடுதல் வேட்டையும் நடந்து வருகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. காஷ்மீர் என்கவுண்ட்டர்: லஷ்கர் இ தொய்பா முக்கிய தளபதி உள்பட 2 பேர் சுட்டு கொலை
காஷ்மீரில் போலீசார் என்கவுண்ட்டரில் லஷ்கர் இ தொய்பா இயக்க முக்கிய தளபதி உள்பட 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.
2. காஷ்மீர் என்கவுண்ட்டர்; 2 பயங்கரவாதிகள் சுட்டு கொலை
ஜம்மு மற்றும் காஷ்மீரில் நடந்த என்கவுண்ட்டரில் ஹிஜ்புல் முஜாகிதீன் இயக்கத்தின் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர்.
3. காஷ்மீரில் பாதுகாப்பு படை என்கவுண்ட்டரில் பயங்கரவாதி சுட்டு கொலை
காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மற்றும் பயங்கரவாதிகள் இடையே நடந்த மோதலில் பயங்கரவாதி சுட்டு கொல்லப்பட்டார்.
4. டெல்லி என்கவுண்ட்டரில் 2 பேர் சுட்டு கொலை: 2 போலீசார் காயம்; ஆயுதங்கள் பறிமுதல்
டெல்லியில் போலீசார் என்கவுண்ட்டர் நடத்தி 2 பேரை சுட்டு கொன்று ஆயுதங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.
5. காஷ்மீரில் என்கவுண்ட்டர்; பயங்கரவாதி சுட்டு கொலை
ஜம்மு மற்றும் காஷ்மீரில் நடந்த என்கவுண்ட்டரில் அடையாளம் காணப்படாத பயங்கரவாதியை வீரர்கள் சுட்டு கொன்றுள்ளனர்.