ராஜஸ்தானில் இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 5 கோடியை தாண்டியது - அசோக் கெலோட் தகவல்


ராஜஸ்தானில் இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 5 கோடியை தாண்டியது - அசோக் கெலோட் தகவல்
x
தினத்தந்தி 14 Sep 2021 2:55 AM GMT (Updated: 14 Sep 2021 2:55 AM GMT)

ராஜஸ்தானில் இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 5 கோடியை தாண்டியதாக முதல்-மந்திரி அசோக் கெலோட் தெரிவித்துள்ளார்.

ஜெய்பூர், 

ராஜஸ்தானில் கிராமப்புறங்கள் தோறும் சென்று பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் இதுவரை செலுத்தப்பட்டுள்ள தடுப்பூசிகளின் எண்ணிக்கை குறித்த விவரங்களை அந்த மாநிலத்தின் முதல்-மந்திரி அசோக் கெலோட் வெளியிட்டார்.

இது குறித்து பேசிய அவர், நேற்று(செப்டம்பர் 13) வரை ராஜஸ்தானில் 5 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதில் 3.74 கோடி பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது என்றும் 1.27 கோடி பேருக்கு இரண்டு டோஸ்களும் செலுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மாநிலம் முழுவதும் பொதுமக்கள் உற்சாகத்துடன் தடுப்பூசி போட்டுக் கொள்வதாகவும், அனைவருக்கும் தடுப்பூசி போடுவதன் மூலம் கொரோனா மூன்றாவது அலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறையும் என்றும் அவர் கூறினார்.

Next Story