அண்டை நாடுகளின் எல்லைகளில் காத்திருக்கும் ஆப்கானிஸ்தான் மக்கள் செயற்கைக் கோள் படங்கள்


அண்டை நாடுகளின் எல்லைகளில் காத்திருக்கும்  ஆப்கானிஸ்தான் மக்கள் செயற்கைக் கோள் படங்கள்
x
தினத்தந்தி 14 Sep 2021 4:57 AM GMT (Updated: 14 Sep 2021 4:57 AM GMT)

ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற, அண்டை நாடுகளின் எல்லைகளில் அந்நாட்டு மக்கள் காத்திருக்கும் செயற்கைக் கோள் புகைப்படத்தை என்டிடிவி வெளியிட்டு உள்ளது.

புதுடெல்லி

தெற்கு ஆசிய நாடான ஆப்கானிஸ்தானில் , சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு , அமெரிக்கப் படைகள் வெளியேறியதை அடுத்து , ஆட்சி அதிகாரத்தை தலீபான்கள் கைப்பற்றி உள்ளனர் .

இந்த நிலையில் தலீபான்கள் ஆட்சிக்கு பயந்து , ஆப்கானிஸ்தான் மக்கள் நாட்டை விட்டு வெளியேற முயற்சி செய்து வருகின்றனர் .

ஆப்கானிஸ்தானை  விட்டு வெளியேற , அண்டை நாடுகளின் எல்லைகளில் அந்நாட்டு மக்கள் காத்திருக்கும் செயற்கைக் கோள் புகைப்படத்தை என்டிடிவி வெளியிட்டு உள்ளது.

குறிப்பாக , ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையில் உள்ள சமான் எல்லையில் , ஸ்பில் போல்டாக் பகுதியில் ஏராளமானோர் காத்திருக்கின்றனர் .

அதேபோல் , தஜிகிஸ்தான் எல்லையை ஒட்டிய ஷிர்கான் பகுதியிலும் , ஈரானை ஒட்டிய இஸ்லாம் - காலா எல்லையிலும் ஆப்கானிஸ்தான் மக்கள் தஞ்சம் கோரி காத்திருப்பது தெரிய வருகிறது .

இந்த செயற்கைக் கோள் புகைப்படம் கடந்த 6 ம் தேதி எடுக்கப்பட்டது . பாகிஸ்தான் அண்மையில் ஆப்கனிஸ்தானுடனான சமான் எல்லையை மூடியது . ஆனால் , எல்லை திறக்கப்படலாம் என்ற நம்பிக்கையுடன் உடைமைகளுடன் ஆப்கானிஸ்தான் மக்கள் காத்திருக்கின்றனர் .

பாகிஸ்தான் , சீனா , ஈரான் , தஜிகிஸ்தான் , உஸ்பெகிஸ்தான் , துர்க்மேனிஸ்தான் ஆகிய நாடுகளுடன் , ஆப்கானிஸ்தான் எல்லைகளைப் பகிர்ந்து கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது .

Next Story