தேசிய செய்திகள்

புதுச்சேரியில் புதிதாக 103 பேருக்கு கொரோனா பாதிப்பு! + "||" + Corona affects 103 new people in Pondicherry

புதுச்சேரியில் புதிதாக 103 பேருக்கு கொரோனா பாதிப்பு!

புதுச்சேரியில் புதிதாக 103 பேருக்கு கொரோனா பாதிப்பு!
புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 103 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி,

புதுச்சேரி சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, அங்கு புதிதாக 103 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி புதுச்சேரியில் 52 பேருக்கும், காரைக்காலில் 38 பேருக்கும், ஏனாமில் 2 பேருக்கும், மாஹேவில் 11 பேருக்கும் என மொத்தம் 103 பேருக்கு (1.81 சதவீதம்) கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதனால் புதுச்சேரியில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,24,939 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் 5,697 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மாநிலத்தில் இதுவரை 8 லட்சத்து 71 ஆயிரத்து 79 பேருக்கு (2வது தவணை உள்பட) தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது

அங்கு புதிதாக கொரோனா உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை. தற்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,823 ஆக (1.46 சதவீதம்) உள்ளது. அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 105 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,22,258 ஆக (97.85 சதவீதம்) அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் தற்போது மருத்துவமனைகளில் 167 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 691 பேரும் என 858 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. புதுச்சேரியில் புதிதாக 103 பேருக்கு கொரோனா பாதிப்பு
புதுச்சேரியில் தற்போது 858 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. புதுச்சேரியில் இன்று கொரோனா பாதிப்பு 50-க்கும் கீழ் குறைந்தது
புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 46 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. புதுச்சேரி - விநாயகர் சதுர்த்தி நெறிமுறைகள் வெளியீடு
புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி பொது இடங்களில் சிலை வைப்பது தொடர்பாக, வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.
4. புதுச்சேரியில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக புதுச்சேரியில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
5. புதுச்சேரியில் பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்கலாம் - தமிழிசை சௌந்தரராஜன்
கொரோனா கட்டுப்பாடுகளுடன் விநாயகர் சதுர்த்தியை மக்கள் கொண்டாட வேண்டும் என்று அம்மாநில கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் அறிவுறுத்தி உள்ளார்.