தேசிய செய்திகள்

சன்சத் தொலைக்காட்சி- பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார் + "||" + PM to launch Sansad TV on Sep 15 along with LS Speaker and RS Chairman

சன்சத் தொலைக்காட்சி- பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்

சன்சத் தொலைக்காட்சி- பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்
சர்வதேச ஜனநாயக தினத்தை முன்னிட்டு இந்தத் தொலைக்காட்சி அறிமுகப்படுத்தப்படுகிறது.
புதுடெல்லி,

கடந்த பிப்ரவரி மாதத்தில், லோக்சபா தொலைக்காட்சி, ராஜ்யசபா தொலைக்காட்சி ஆகிய இரண்டையும் இணைக்க முடிவெடுக்கப்பட்டது.  புதிதாக சன்சத் என்ற தொலைக்காட்சி தொடங்கவும்  முடிவெடுக்கப்பட்டது. 

இந்த தொலைக்காட்சியின் தலைமை நிர்வாக அலுவலர் கடந்த மார்ச் மாதம் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், சன்சத் தொலைக்காட்சியை துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு, பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் நாளை தொடங்கி வைக்கின்றனர்.

சன்சத் தொலைக்காட்சியில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் மற்றும் ஜனநாயக அமைப்புகள், ஆளுகை மற்றும் திட்டங்கள்,கொள்கைகளின் அமலாக்கம் போன்றவை ஒளிபரப்பாகும். சர்வதேச ஜனநாயக தினத்தை முன்னிட்டு இந்தத் தொலைக்காட்சி அறிமுகப்படுத்தப்படுகிறது. 


தொடர்புடைய செய்திகள்

1. ஆந்திரா: இரும்பு உதிரி பாகங்களை கொண்டு பிரதமர் மோடியின் சிலை அமைப்பு
ஆந்திராவில் இரும்பு உதிரி பாகங்களை கொண்டு பிரதமர் மோடிக்கு 14 அடி உயர சிலை அமைக்கப்பட்டுள்ளது.
2. பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் பாரதியார் பெயரில் இருக்கை அமைக்கப்படும் - பிரதமர் மோடி அறிவிப்பு
பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் பாரதியார் பெயரில் இருக்கை அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
3. நாட்டின் தற்போதைய கொரோனா சூழல் குறித்து பிரதமர் மோடி ஆலோசனை
நாட்டின் தற்போதைய கொரோனா சூழல் குறித்து பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
4. பிரதமர் மோடி தலைமையில் இன்று ‘பிரிக்ஸ்' உச்சி மாநாடு
பிரதமர் மோடி தலைமையில் 13-வது ‘பிரிக்ஸ்' உச்சி மாநாடு இன்று நடைபெறுகிறது
5. ஓவல் டெஸ்டில் இந்தியா வெற்றி; பிரதமர் மோடி பாராட்டு
50 ஆண்டுகளுக்குப் பிறகு ஓவல் மைதானத்தில் இந்தியா வரலாற்று வெற்றியை ருசித்துள்ளது.