நாடு முழுவதும் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 75.81 கோடியாக உயர்வு: மத்திய அரசு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 14 Sep 2021 3:53 PM GMT (Updated: 14 Sep 2021 3:53 PM GMT)

இந்தியாவில் இதுவரை 75.81 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி, 

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் வேகம் சற்று குறைந்து வருகிறது. கொரோனா பரவலின் 2-வது அலையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட தீவிர நடவடிக்கைகள் காரணமாக நோய்த் தொற்றில் இருந்து குணமடைபவர்களின் விகிதம் அதிகரித்துள்ளது.

கொரோனாவில் இருந்து ஒட்டுமொத்த நாட்டையும் பாதுகாக்கும் நோக்கில் தகுதி வாய்ந்த அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணிகளை மத்திய அரசு முடுக்கி விட்டு உள்ளது. இதற்காக உற்பத்தியாளர்களிடம் இருந்து நேரடியாக தடுப்பூசியை பெற்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது.

இந்நிலையில் இந்தியாவில் இதுவரை 75.81 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 54,72,356 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் இன்று மாலை 7 மணிவரை மொத்தம் 75,81,99,331 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

இதன்படி 18 முதல் 44 வயது வரையில் உள்ளவர்கள் - முதல் தவணை - 30,58,59,611, இரண்டாம் தவணை - 4,69,45,312

45 முதல் 59 வயது வரையில் உள்ளவர்கள்: முதல் தவணை - 14,54,51,999,  இரண்டாம் தவணை - 6,43,17,504

60 வயதுக்கு மேல் உள்ளவர்கள்: முதல் தவணை - 9,41,15,941,   இரண்டாம் தவணை - 5,00,24,916

சுகாதாரத்துறையில் உள்ளவர்கள்: முதல் தவணை - 1,03,65,012,   இரண்டாம் தவணை - 86,26,343

முன்களப் பணியாளர்கள்: முதல் தவணை - 1,83,39,398,  இரண்டாம் தவணை - 1,41,53,295

Next Story