தேசிய செய்திகள்

கர்நாடகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: சித்தராமையா + "||" + Unsafe city for women in Karnataka: Siddaramaiah

கர்நாடகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: சித்தராமையா

கர்நாடகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: சித்தராமையா
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு குறித்து ஒரு தீர்மானத்தை சட்டசபையில் கொண்டு வர முடிவு செய்துள்ளோம். நாங்கள் நடத்திய மாட்டு வண்டி போராட்டத்தை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை குறை கூறியுள்ளார். இதற்கு முன்பு டெல்லியில் வாஜ்பாய், பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நாடாளுமன்றத்திற்கு மாட்டு வண்டியில் வந்தார். இது பசவராஜ் பொம்மைக்கு தெரியாதா?.

யாதகிரியில் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இதை நான் கண்டிக்கிறேன். கர்நாடகத்திற்கு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு பதிலாக மைசூருவில் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணை போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா குறை கூறுகிறார். அவர் எப்படி பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குவார்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடகத்தில் இதுவரை 4½ கோடி பேருக்கு கொரோனா பரிசோதனை: சுகாதாரத்துறை
கர்நாடகத்தில் இதுவரை 4½ கோடி பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
2. கர்நாடகத்தில் தொழில் தொடங்க நடைமுறைகளை எளிமைப்படுத்தி உள்ளோம்: மந்திரி முருகேஷ் நிரானி
தொழில்துறை மந்திரி முருகேஷ் நிரானி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
3. கர்நாடகத்தில் 3 மாநகராட்சிகளுக்கு நடந்த தேர்தலில் பா.ஜனதா வெற்றி
கர்நாடகத்தில் 3 மாநகராட்சிகளுக்கு நடந்த தேர்தலில் ஆளும் பா.ஜனதா அமோக வெற்றி பெற்றுள்ளது. பெலகாவியில் நீண்டகாலமாக ஆதிக்கம் செலுத்திய மராட்டிய அமைப்பு படுதோல்வியை சந்தித்தது.
4. கர்நாடகத்தில் இன்று 6 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு
கர்நாடகத்தில் இன்று 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
5. கர்நாடகத்தில் 50 போலீசாருக்கு பதவி உயர்வு - டி.ஜி.பி. பிரவீன் சூட் உத்தரவு
கர்நாடகத்தில் இன்ஸ்பெக்டர்களாக பணியாற்றி வந்த 25 பேர் துணை போலீஸ் சூப்பிரண்டுகளாக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளனர்.