தேசிய செய்திகள்

மத்திய பிரதேசத்தில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு; கூலர்கள் பயன்பாட்டுக்கு அரசு நிர்வாகம் தடை + "||" + Increase in dengue incidence in Madhya Pradesh; Government administration bans the use of coolers

மத்திய பிரதேசத்தில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு; கூலர்கள் பயன்பாட்டுக்கு அரசு நிர்வாகம் தடை

மத்திய பிரதேசத்தில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு; கூலர்கள் பயன்பாட்டுக்கு அரசு நிர்வாகம் தடை
மத்திய பிரதேசத்தில் டெங்கு பாதிப்பு அதிகரித்த நிலையில் கூலர்கள் பயன்பாட்டுக்கு அரசு நிர்வாகம் தடை விதித்து உள்ளது.


போபால்,

மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர் மாவட்டத்தில் டெங்கு பாதிப்புகள் அதிகரித்து காணப்படுகின்றன.  டெங்குவை ஏற்படுத்த கூடிய கொசுக்களால் இந்நோய் பரவுகிறது.

இந்த நிலையில், டெங்கு பாதிப்புகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஜபல்பூர் மாவட்ட நிர்வாகம் முடிவு எடுத்து உள்ளது.  இதுபற்றி, மாவட்ட மலேரியா அதிகாரி ராகேஷ் பஹாரியா கூறும்போது, கூலர்களில் மீதமிருக்கும் நீரில் கொசுக்களின் லார்வாக்கள் வளரும்.

கூலர்களை வாரத்திற்கு ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டும்.  கடந்த ஜனவரி முதல் டெங்கு நோயாளிகள் எண்ணிக்கை 410 ஆக உள்ளது என கூறியுள்ளார்.  டெங்கு பாதிப்புகளை குறைப்பதற்காக, ஜபல்பூர் மாவட்ட நிர்வாகம் கூலர்கள் பயன்பாட்டை நிறுத்தி வைத்து உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. ராஜஸ்தானில் தேர்வு; இன்டெர்நெட்டுக்கு தடை
ராஜஸ்தானில் நடைபெற உள்ள தேர்வை முன்னிட்டு இன்றும், நாளையும் இன்டெர்நெட்டுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
2. சர்வதேச விமான போக்குவரத்து மீதான தடை விலக்கப்படுமா? - மத்திய அரசு விளக்கம்
கடந்த ஆண்டு முதல் அமலில் இருக்கும் சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை விலக்கப்படுமா என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
3. டெல்லியில் டெங்கு அதிகரிப்பு: நிரம்பி வழியும் வார்டுகள்... தரையில் நோயாளிகள்
டெல்லியில் டெங்கு பாதிப்புகள் அதிகரித்த நிலையில், நோயாளிகள் தரையில் இருந்தபடி சிகிச்சை பெற கூடிய சூழல் ஏற்பட்டு உள்ளது.
4. கன மழை நீடிக்க வாய்ப்பு: சபரிமலையில் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு தடை
ஐப்பசி மாத பூஜையையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது.
5. ராஜஸ்தானில் ஜனவரி 31 வரை பட்டாசு விற்கவும், வெடிக்கவும் தடை
ராஜஸ்தான் மாநிலத்தில் வருகின்ற ஜனவரி 31-ந் தேதி வரை பட்டாசு விற்கவும், வெடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.