தேசிய செய்திகள்

மேற்கு வங்காள அரசு தலைமை வக்கீல் ராஜினாமா + "||" + West Bengal Advocate General Kishore Datta resigns, fourth top law officer to quit in a row

மேற்கு வங்காள அரசு தலைமை வக்கீல் ராஜினாமா

மேற்கு வங்காள அரசு தலைமை வக்கீல் ராஜினாமா
மேற்கு வங்காள மாநில அரசு தலைமை வக்கீல் கிஷோர் தத்தா நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். தனிப்பட்ட காரணங்களால் ராஜினாமா செய்வதாக அவர் தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில் அம்மாநில கவர்னர் ஜெகதீப் தங்கர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘அரசியல் சாசனத்தின் 165-வது பிரிவின் அடிப்படையில், மேற்கு வங்காள அரசு தலைமை வக்கீல் பதவியில் இருந்து கிஷோர் தத்தாவின் ராஜினாமா உடனடியாக ஏற்கப்படுகிறது’ என்று தெரிவித்துள்ளார். கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரியில் தலைமை வக்கீல் பதவி ஏற்ற கிஷோர் தத்தா, மம்தா பானர்ஜி ஆட்சிக்காலத்தில் இப்பதவியை ராஜினாமா செய்த 4-வது வக்கீல் ஆவார்.

இவருக்கு முன், அனிந்திய மித்ரா, பிமல் சட்டர்ஜி, ஜெயந்த மித்ரா ஆகிய அரசு தலைமை வக்கீல்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டனர்.