தேசிய செய்திகள்

ஒடிசாவில் கனமழை; 4 பேர் பலி + "||" + Heavy rain in Odisha; 4 killed

ஒடிசாவில் கனமழை; 4 பேர் பலி

ஒடிசாவில் கனமழை; 4 பேர் பலி
ஒடிசாவில் பெய்த கனமழைக்கு 4 பேர் உயிரிழந்து உள்ளனர் என சிறப்பு நிவாரண ஆணையாளர் தெரிவித்து உள்ளார்.கட்டாக்,

ஒடிசாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.  இந்த நிலையில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது ஒடிசா கடலோரம் கடந்து சென்றது.  இதில், கடந்த 2 நாட்களில் சராசரியாக 155 மி.மீ. மழை பெய்துள்ளது. 

இதன் தொடர்ச்சியாக சில பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.  சில கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன.  இதுவரை 4 பேர் உயிரிழந்து உள்ளனர் என ஒடிசா சிறப்பு நிவாரண ஆணையாளர் பிரதீப் ஜே ஜெனா தெரிவித்து உள்ளார்.

ஒடிசாவின் புவனேஸ்வர், கட்டாக், பத்ரக் மற்றும் வேறு சில நகர பகுதிகளிலும் வெள்ளநீர் சூழ்ந்து காணப்படுகிறது.  கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றி ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. சோமாலியா: பயங்கரவாத அமைப்பு, படை மோதல்; 20 பேர் உயிரிழப்பு
சோமாலியாவில் பயங்கரவாத அமைப்பிற்கும், படையினருக்கும் நடந்த மோதலில் 20 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.
2. காங்கோ நாட்டில் மர்ம நோய்; 165 குழந்தைகள் உயிரிழப்பு
காங்கோ நாட்டில் மர்ம நோய் தாக்குதலுக்கு 165 குழந்தைகள் உயிரிழந்து உள்ளனர்.
3. தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று (சனிக்கிழமை) கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
4. இந்திய விமான படை தினம்: பிரதமர் மோடி வாழ்த்து
நாட்டை காக்கும் சவாலான தருணங்களில் தனித்துவமுடன் செயல்படுபவர்கள் என இந்திய விமான படை தினத்தினை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
5. தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.