தேசிய செய்திகள்

கர்நாடகா: கார் மோதியதில் மேம்பாலத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட பைக் - 2 பேர் பலி + "||" + Bengaluru Car hits bike on flyover, two riders fall 40ft to death

கர்நாடகா: கார் மோதியதில் மேம்பாலத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட பைக் - 2 பேர் பலி

கர்நாடகா: கார் மோதியதில் மேம்பாலத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட பைக் - 2 பேர் பலி
கர்நாடகாவில் அதிவேகமாகமாக வந்த கார் மோதியதில் பைக்கில் சென்ற இருவர் மேம்பாலத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர்.
பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள எலக்ட்ரானிக்ஸ் சிட்டி மேம்பாலத்தில் உள்ள சாலையில் நேற்று இரவு 9.30 மணியளவில் தமிழ்நாடு பதிவெண் கொண்ட ஒரு பைக் ஓசூர் நோக்கி சென்றுக்கொண்டிருந்தது. அந்த பைக்கில் ஆண் மற்றும் பெண் என இருவர் பயணித்தனர்.

அப்போது அந்த மேம்பால சாலையில் வந்த கார் ஒன்று பைக் மீது பின்னால் இருந்து வேகமாக மோதியது. இதனால், கட்டுப்பாட்டை இழந்த பைக் மேம்பாலத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டது. பைக்கில் பயணம் செய்த இருவரும் மேம்பாலத்தில் இருந்து 40 அடி கீழே உள்ள சாலையில் விழுந்தனர். இந்த கோர விபத்தில் மேம்பாலத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட பைக்கில் சென்ற இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தை ஏற்படுத்திய காரில் இருந்த நபரை படுகாயங்களுடன் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்த 2 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

விபத்துக்குள்ளான பைக் தமிழ்நாடு பதிவெண்ணை கொண்டது என்பதால் உயிரிழந்த 2 பேரும் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. முழு அடைப்பு போராட்டம்: பெங்களூருவில் பாதுகாப்பு பணியில் 4 ஆயிரம் போலீசார்
முழு அடைப்பையொட்டி பெங்களூருவில் முன் எச்சரிக்கையாக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
2. பெங்களூருவில் எல்லை பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் 70 பேருக்கு கொரோனா தொற்று
பெங்களூருவில் எல்லை பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் 70 பேருக்கு கொரோனா தொற்று உறுதி கண்டறியப்பட்டுள்ளது.
3. பெங்களூருவில் சாலைப் பணிகளுக்கு 5 ஆண்டுகளில் ரூ.20 ஆயிரம் கோடி செலவு - பசவராஜ் பொம்மை தகவல்
பெங்களூருவில் சாலைகள் பராமரிப்பு உள்ளிட்ட பணிகளுக்காக ரூ.20 ஆயிரம் கோடிக்கு நிர்வாக ரீதியான அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
4. கொல்கத்தா அணி அபார பந்து வீச்சு: 92 ரன்களில் சுருண்டது பெங்களூரு
பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணிக்கு 93 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
5. பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த சதி திட்டம்; பெங்களூரு, மைசூருவில் பலத்த பாதுகாப்பு
பெங்களூரு, மைசூருவில் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டியதாக, டெல்லியில் கைதான 6 பயங்கரவாதிகள் வெளியிட்ட தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.