தேசிய செய்திகள்

தீபாவளி பண்டிகை: டெல்லியில் பட்டாசுக்கு தடை + "||" + Diwali Firecrackers Banned In Delhi This Year Too Over Pollution

தீபாவளி பண்டிகை: டெல்லியில் பட்டாசுக்கு தடை

தீபாவளி பண்டிகை: டெல்லியில் பட்டாசுக்கு தடை
டெல்லியில் நிலவும் அதிகப்படியான காற்று மாசுபாடு காரணமாக பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டெல்லியில் பட்டாசு விற்கவும், வெடிக்கவும் தடை விதிக்கப்படுவதாக முதல் மந்திரி அரவிந்த்  கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது; - 

டெல்லியில் நிலவும் காற்று மாசு காரணமாக கடந்தாண்டை போலவே தீபாவளிக்கு பட்டாசு சேமிக்கவும், விற்கவும், வெடிக்கவும் இந்தாண்டும் தடை விதிக்கப்படுகிறது. அப்போது தான் மக்களின் உயிரை பாதுகாக்க முடியும்.

கடந்தாண்டு பட்டாசு வியாபாரிகள் பட்டாசுகளை சேமித்து வைத்திருந்த நிலையில், தடை விதிக்கப்பட்டதால் பலர் நஷ்டமடைந்தனர். அதனால், இந்தாண்டு யாரும் பட்டாசுகளை சேமித்து வைக்க வேண்டாம் என வேண்டுகோள் வைக்கிறேன்” எனப்பதிவிட்டுள்ளார். 


தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் 1 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக முதல் மந்திரி கெஜ்ரிவால் தகவல்
டெல்லியில் இதுவரை 1 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக முதல் மந்திரி கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
2. டெல்லியில் வீட்டுக்கு சென்று ரேசன் பொருட்களை வழங்கும் திட்டம்:மத்திய அரசு மீது கெஜ்ரிவால் பாய்ச்சல்
கொரோனா பெருந்தொற்று சமயத்தில் பிசா டெலிவரி செய்ய அனுமதி அளிக்கப்படும் போது ஏன் ரேஷன் பொருட்களை விநியோகிக்க அனுமதி அளிக்கக் கூடாது என்று கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.
3. டெல்லியில் ஊரடங்கு தளர்வுகள் - முதல் மந்திரி கெஜ்ரிவால் அறிவிப்பு
டெல்லியில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை முதல் மந்திரி கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
4. டெல்லியில் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு
டெல்லியில் ஊரடங்கு மேலும் 6 நாட்களுக்கு நீட்டிக்கப்படுவதாக முதல் மந்திரி கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.