தேசிய செய்திகள்

கொரோனா குறித்த பொய்யான தகவல்கள் பகிரப்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் - ஆய்வில் தகவல் + "||" + India top source of social media misinformation on Covid-19: Study

கொரோனா குறித்த பொய்யான தகவல்கள் பகிரப்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் - ஆய்வில் தகவல்

கொரோனா குறித்த பொய்யான தகவல்கள் பகிரப்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் -  ஆய்வில் தகவல்
சமூக வலைதளங்கள் மூலமாக பரவும் 18.07 சதவீத பொய்யான தகவல்கள் இந்தியாவிலிருந்து பரப்பப்பட்டுள்ளது என ஆய்வில் தெரியவந்து உள்ளது.
புதுடெல்லி

138 நாடுகளில் கொரோனா பரவல் குறித்த தவறான தகவல்கள் மற்றும் மூல பகுப்பாய்வு' என பெயரிடப்பட்ட ஆய்வு சாகே நூலக சங்கம் மற்றும் நிறுவனங்களின் சர்வதேச கூட்டமைப்பு இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட 138 நாடுகளில் பகிரப்பட்ட 9,657 தவறான தகவல்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பல்வேறு நாடுகளில் கொரோனா குறித்து பகிரப்படும் தவறான செய்திகள் உண்மையானதா அல்லது பொய்யானதா என கண்டறியும் வகையில் 94 அமைப்புகள் இந்த ஆய்வில் ஈடுபட்டன.

இதில் இணையப் பயன்பாடு அதிகமுள்ள காரணத்தால் கொரோனா குறித்த பொய்யான தகவல்கள் பகிரப்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. 

இணையம் குறித்த போதுமான வழிப்புணர்வு இல்லாத காரணத்தாலும், சமூக வலைதளங்களை அதிகமாக பயன்படுத்துவதாலும்  இது நிகழ்ந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இதுகுறித்து வெளியான ஆய்வில் கூறப்படுவதாவது:-

ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நாடுகளில், சமூக வலைதளங்கள் மூலமாக பரவும் 18.07 சதவீத  பொய்யான தகவல்கள் இந்தியாவிலிருந்து பரப்பப்பட்டுள்ளது. இணையப் பயன்பாடு அதிகமுள்ள காரணத்தாலும் இணையப் பயன்பாடு அதிகமுள்ள காரணத்தாலும் சமூக வலைதளங்களை அதிகமாக பயன்படுத்துவதாலும் இவ்வாறு நடைபெறாலாம்.

கொரோனா குறித்து தவறான தகவல்கள் பகிரப்பட்டதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா(15.94), அமெரிக்கா(9.44), பிரேசில்(8.57), ஸ்பெயின்(8.03) ஆகியவை இடம்பெற்றுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

1. எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க..! காதலியை காரின் மேல் கட்டி வைத்து ஓட்டிச் சென்ற காதலன்
தனது காதலி இலோனாவை காரின் மேல் கயிறு கொண்டு கட்டி வைத்து கொண்டு ரோட்டில் கார் ஓட்டி சென்று உள்ளார்.. இருவரும் கைகளில் விலங்கு மாட்டி உள்ளனர்.
2. சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை - தமிழக காவல்துறை
சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து பரப்புவோர் மீது அளிக்கப்படும் புகாரில் முகாந்திரம் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.