அரியானாவில் மர்மக் காய்ச்சல்: 10 நாட்களில் 8 சிறார்கள் உயிரிழப்பு


அரியானாவில் மர்மக் காய்ச்சல்: 10 நாட்களில் 8 சிறார்கள் உயிரிழப்பு
x
தினத்தந்தி 15 Sep 2021 10:38 AM GMT (Updated: 15 Sep 2021 10:38 AM GMT)

காய்ச்சல் அறிகுறியுடன் 8 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அவர்கள் மரணத்துக்கான காரணம் குறித்து சுகாதாரத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.


அரியானாவின் பல்வால் மாவட்டத்தில் உள்ள சில்லி என்ற குக்கிராமத்தில் கடந்த 10 நாட்களில்  8 சிறார்கள் மர்மக் காய்ச்சலுக்கு உயிரிழந்து இருப்பது பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், 18-வயதுக்குட்பட்ட 35 பேர் உள்பட  44 பேருக்கு காய்ச்சல் அறிகுறிகள் ஏற்பட்டுள்ளது. 

இதையடுத்து 44 பேரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சல் அறிகுறியுடன் 8 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அவர்கள் மரணத்துக்கான காரணம் குறித்து சுகாதாரத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.  

டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் உயிரிழந்தவர்களுக்கு ரத்தத்தில் தட்டணுக்கள் குறைவாக இருந்தாக சுகாதாரத்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. காய்ச்சல் ஏற்படுவதற்கான காரணத்தை கண்டறிய சில்லி கிராமம் முழுவதும் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. 

Next Story