இந்தியாவில் ஸ்புட்னிக் லைட் 3-ஆம் கட்ட பரிசோதனைக்கு அனுமதி


இந்தியாவில் ஸ்புட்னிக் லைட்  3-ஆம் கட்ட பரிசோதனைக்கு அனுமதி
x
தினத்தந்தி 15 Sep 2021 11:58 AM GMT (Updated: 15 Sep 2021 11:58 AM GMT)

மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கியுள்ளது.

புதுடெல்லி,

சிங்கிள் டோஸ் கொண்ட ரஷ்யாவின் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசி  கொண்டு, கடந்த ஜூலை மாதம் ரஷ்யாவில் மேற்கொள்ளப்பட்ட முதல் மற்றும் இரண்டாம் கட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகள் மற்றும் தரவுகளை டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் சமர்ப்பித்து, அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தது. 

ஆனால், இந்த கோரிக்கையை நிராகரித்த இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம், தடுப்பூசியின் நோய் எதிர்ப்பு தன்மை மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து கூடுதல் தரவுகள் தேவைப்படுவதாகவும், மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகளை தாக்கல் செய்யுமாறும் அறிவுறுத்தியிருந்தது. 

இந்நிலையில், மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கியுள்ளது.

Next Story