தேசிய செய்திகள்

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் தினசரி கொரோனா பாதிப்பு + "||" + India Coronavirus Report on 16th Septemper

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் தினசரி கொரோனா பாதிப்பு

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் தினசரி கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30 ஆயிரத்து 570 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செயப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 30 ஆயிரத்து 570 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய நாள் ( செவ்வாய் 25,404) ( புதன் 27,176) பாதிப்பை விட பாதிப்பை விட அதிகம் ஆகும்.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 3 லட்சத்து 42 ஆயிரத்து 923 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 38 ஆயிரத்து 303 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 25 லட்சத்து 60 ஆயிரத்து 474 ஆக அதிகரித்துள்ளது.

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 431 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 43 ஆயிரத்து 928 ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 76 கோடியே 57 லட்சத்து 17 ஆயிரத்து 137 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 64 லட்சத்து 51 ஆயிரத்து 423 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 24.27 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24.27 கோடியாக அதிகரித்துள்ளது.
2. அசாமில் மேலும் 308 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
அசாம் மாநிலத்தில் மேலும் 308 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. மராட்டியத்தில் இன்று 1,825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மராட்டிய மாநிலத்தில் இன்று 1,825 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
4. உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 24.22 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24.22 கோடியாக அதிகரித்துள்ளது.
5. கர்நாடகாவில் மேலும் 349 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 349 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.