உணவு வீணாவது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த புது முயற்சி: பிஸ்கெட் பேக்குகளால் சிவலிங்கம் உருவாக்கிய பெண்


உணவு வீணாவது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த புது முயற்சி:  பிஸ்கெட் பேக்குகளால் சிவலிங்கம் உருவாக்கிய பெண்
x
தினத்தந்தி 16 Sep 2021 4:56 AM GMT (Updated: 16 Sep 2021 4:56 AM GMT)

குஜராத்தில் உணவு வீணாவது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் புது முயற்சியாக பிஸ்கெட் பேக்குகளை கொண்டு பெண் ஒருவர் சிவலிங்கம் உருவாக்கி உள்ளார்.

சாம்பனெர்,

குஜராத்தின் சாம்பனெர் பகுதியை சேர்ந்தவர் ராதிகா சோனி.  இவர் உணவு வீணாவது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக புது முயற்சி ஒன்றை மேற்கொண்டு உள்ளார்.

இதன்படி, 1,008 பிஸ்கெட் பேக்குகளை கொண்டு சிவலிங்கம் ஒன்றை உருவாக்கி உள்ளார்.  அதில், விநாயகர் சிலையை வைத்து உள்ளார்.

இதுபற்றி சோனி கூறும்போது, உலகம் முழுவதும் ஒவ்வொரு நாளும் மூன்றில் ஒரு பங்கு உணவு வீணடிக்கப்படுகிறது.  உணவு வீணாவது பற்றிய விழப்புணர்வை பரப்ப நாங்கள் முடிவு செய்துள்ளோம்.  அதற்காக இதனை வடிவமைத்து உள்ளோம்.

விநாயகர் சிலையை கரைத்த பின்பு இந்த பிஸ்கெட்டுகளை ஏழைகளுக்கு நன்கொடையாக வழங்கி விடுவோம் என்று கூறியுள்ளார்.


Next Story