1 முதல் 3ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 20ஆம் தேதி முதல் அரியானாவில் பள்ளிகள் திறப்பு!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 16 Sep 2021 10:31 AM GMT (Updated: 16 Sep 2021 11:37 AM GMT)

அரியானாவில் 1 முதல் 3ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 20ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.

சண்டிகார்,

அரியானாவில் செப்டம்பர் 20ஆம் தேதியில் இருந்து 1 முதல் 3ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கன்வர் பால் குஜ்ஜார் தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனா வழிகாட்டுதல்கள் மற்றும் சமூக இடைவெளி விதிகளை பராமரிக்க மாநில அரசு ஒரு நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை (எஸ்ஓபி) வெளியிட்டுள்ளது. இதன்படி வகுப்புகள் ஆன்லைனிலும் நடைபெறும் என்றும் நேரடி வகுப்புகளில் பங்கேற்க விரும்புவோர் பெற்றோரிடமிருந்து ஒப்புதல் கடிதத்தை கொண்டு வர வேண்டும் என்றும் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் வெப்ப பரிசோதனை மற்றும் கை சுத்திகரிப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேரடி வகுப்புகளில் கலந்து கொள்வது கட்டாயம் இல்லை என்றும், வகுப்புகளில் கலந்துகொள்ள எந்த மாணவருக்கும் அழுத்தம் கொடுக்க வேண்டாம் என்றும் மாநில அரசு, பள்ளிகளை கேட்டுக் கொண்டுள்ளது. 

முன்னதாக ஜூலை 23ஆம் தேதியிலிருந்து 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும், செப்டம்பர் 1 ஆம் தேதியிலிருந்து 4 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story