நாட்டில் மதியம் 1.30 மணி நிலவரப்படி செலுத்திய கொரோனா தடுப்பூசிகள் 1 கோடி + "||" + As many as 1 crore corona vaccines were paid in the country as on 1.30 pm
நாட்டில் மதியம் 1.30 மணி நிலவரப்படி செலுத்திய கொரோனா தடுப்பூசிகள் 1 கோடி
நாட்டில் மதியம் 1.30 மணி நிலவரப்படி 1 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன.
புதுடெல்லி,
பிரதமர் மோடியின் 71வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உள்ளிட்ட தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து உள்ளனர்.
பிரதமரின் பிறந்த நாளை முன்னிட்டு கொரோனா தடுப்பூசி எண்ணிக்கையில் சாதனை நிகழ்த்த பா.ஜ.க. திட்டமிட்டது. அதற்கான துரித பணிகளில் இறங்கியுள்ளது. இந்த நிலையில், நாடு முழுவதும் மதியம் 1.30 மணி நிலவரப்படி 1 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன என தெரிவிக்கப்பட்டு உள்ளது.