“பெரியார் வழியில் அன்பு நிறைந்த உலகை உருவாக்குவோம்” - பினராயி விஜயன்


“பெரியார் வழியில் அன்பு நிறைந்த உலகை உருவாக்குவோம்” - பினராயி விஜயன்
x
தினத்தந்தி 17 Sep 2021 10:45 AM GMT (Updated: 17 Sep 2021 10:45 AM GMT)

தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

திருவனந்தபுரம்,

தந்தை பெரியார் 1879 ஆம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி பிறந்தார். திராவிடர் கழகத்தை தோற்றுவித்த தந்தை பெரியாரின் 143-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து, பல்வேறு அரசியல் கட்சியினர் தந்தை பெரியாருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், தந்தை பெரியாரின் பிறந்தநாளான இன்று முதல்முறையாக சமூகநீதிநாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டதாகவும், உயர்வுதாழ்வில்லாச் சமத்துவச் சமுதாயம் நோக்கிய நமது பயணம் தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், தனது டுவிட்டர் பக்கத்தில் பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறியுள்ளதாவது;-

“பெரியாரின் பிறந்த நாளில் அவருக்கு வணக்கத்தை உரித்தாக்குகிறோம். சமூக நீதி,சாதி ஒழிப்பு மற்றும் மத நல்லிணக்கம் ஆகியவற்றுக்கான போராட்டங்கள் அதிகமாக தேவைப்படும் இக்காலகட்டத்தில் அவர் வழியில் நாமும் அன்பால் நிறைந்த உலகை உருவாக்க உறுதி கொள்வோம்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Next Story