ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் அண்டை நாடுகளை பாதிக்கும்- பிரதமர் மோடி


ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் அண்டை நாடுகளை பாதிக்கும்- பிரதமர் மோடி
x
தினத்தந்தி 17 Sep 2021 12:56 PM GMT (Updated: 17 Sep 2021 12:56 PM GMT)

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக பேசினார்.

புதுடெல்லி,

சீனா, இந்தியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷ்யா, பாகிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய 8 நாடுகள் அடங்கிய ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் (எஸ்சிஓ) நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் 21-வது மாநாடு தஜகிஸ்தானின் துஷான்பே நகரில் நடைபெற்றது. இந்த ஆண்டு சவுதி அரேபியோ, ஈரான், எகிப்து மற்றும் கத்தார் ஆகிய நாடுகள் புதிதாக இந்த அமைப்பில் இணைந்துள்ளன.

இந்த மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி மூலம் பங்கேற்று பேசினார்.  அப்போது அவர் கூறியதாவது;-

ஆப்கானிஸ்தானின் சமீபத்திய முன்னேற்றங்கள் இந்தியா  உள்ளிட்ட அண்டை நாடுகளை பாதிக்கும். ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து  நிலையற்ற தன்மை நீடிப்பது பயங்கரவாதம், தீவிரவாத சிந்தனைகளை உலகம் முழுமைக்கும் ஊக்குவிப்பதாய் அமையும்.  ஆகவே, இந்த விவகாரத்தில் பிராந்திய கவனம் மற்றும் ஒத்துழைப்பு  அவசியம் ஆகும்.  வன்முறைகள் மூலமாக ஆட்சியை கைப்பற்றலாம்  என பிற பயங்கரவாத குழுக்களையும் ஊக்கப்படுத்துவதாக ஆப்கானிஸ்தான் சூழல் அமையும். 

ஆப்கானில் பெண்கள், சிறுபான்மையினர், சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய பிரதிநித்துவம் அவசியம். எந்த நாட்டிலும் பயங்கரவாதத்தை பரப்ப ஆப்கானிஸ்தான் பயன்படுத்தக் கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும். ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் போதைபொருள் கடத்தல், சட்ட விரோத ஆயுதம் ஆகியவை கட்டுக்கடங்காமல் செல்ல  வழிவகுக்கும்” என்றார். 

Next Story