ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல், டீசலை கொண்டுவரக் கூடாது என அனைத்து உறுப்பினர்களும் கருத்து - நிர்மலா சீதாராமன்


ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல், டீசலை கொண்டுவரக் கூடாது என அனைத்து உறுப்பினர்களும் கருத்து -  நிர்மலா சீதாராமன்
x
தினத்தந்தி 17 Sep 2021 3:20 PM GMT (Updated: 17 Sep 2021 3:20 PM GMT)

ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல், டீசலை கொண்டுவரக் கூடாது என அனைத்து உறுப்பினர்களும் கருத்து என நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

லக்னோ,

நாட்டில் ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு முறை கடந்த 2017- ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி முதல் நடைமுறையில் உள்ளது.  ஜி.எஸ்.டி. நடைமுறை அமலுக்கு வந்தது முதல் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் மத்திய நிதிமந்திரி தலைமையில் நடைபெற்று வருகிறது. 

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் 45-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: -பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருவதற்கான நேரம் இதுவல்ல என்று உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்க ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல், டீசலை கொண்டுவரக் கூடாது என அனைத்து உறுப்பினர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். 

கொரோனா மருந்துகளுக்கான ஜி.எஸ்.டி வரிச்சலுகை டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கப்பல் மற்றும் விமானம் மூலம் ஏற்றுமதி செய்யப்படும் சரக்குகளுக்கான போக்குவரத்துக்கு செப்டம்பர் 30 ஆம் தேதி வரை ஜி.எஸ்.டியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. 

ஜிஎஸ்டி போர்ட்டலில் தொழில்நுட்ப சிக்கல்களால் ஏற்றுமதியாளர்கள் ஐடிசி( Input Tax Credit) வரியை திரும்பப் பெறுவதில் உள்ள சிரமம் காரணமாக இந்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளது” என்றார். 

Next Story