தேசிய செய்திகள்

பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு: மற்றொரு நபர் கைது + "||" + Contact with Pakistan terrorist organization: Another person arrested

பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு: மற்றொரு நபர் கைது

பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு:  மற்றொரு நபர் கைது
பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய மற்றொரு நபரை மராட்டியத்தில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.
மும்பை,

டெல்லி சிறப்பு பிரிவு போலீசார், பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 6 பேரை கடந்த செவ்வாய் கிழமை கைது செய்தனர்.  அவர்களில் இருவர் பாகிஸ்தானியர்களிடம் பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள் ஆவர்.

இதில் தாஹீர் என்ற மற்றொரு நபர் போலீசில் சிக்காமல் தப்பி விட்டார்.  அவர்கள் நாடு முழுவதும் குண்டுவெடிப்பு மற்றும் படுகொலைகளை நடத்த திட்டமிட்டு இருந்தனர்.  இதுதவிர, அவர்களிடம் இருந்து வெடிகுண்டுகள் மற்றும் துப்பாக்கிகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என போலீசார் தெரிவித்தனர்.

இந்த நிலையில், தொடக்க விசாரணையில், இம்தியாஸ் மற்றும் முகமது ஜலீல் ஆகிய இருவருக்கும் எதிராக எந்தவித சான்றுகளும் இல்லை என்பதற்காக அவர்கள் விடுவிக்கப்படுகின்றனர் என்று போலீசார் தெரிவித்தனர்.

மராட்டிய பயங்கரவாத ஒழிப்பு படை மற்றும் மும்பை போலீசார் கூட்டாக இணைந்து பயங்கரவாத தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.  இதில், நகரின் ஜோகேஷ்வரி பகுதியில் வைத்து ஜாகீர் என்ற நபரை கைது செய்தனர்.

அவருக்கு பயங்கரவாத அமைப்புடன் முக்கிய தொடர்பு உள்ளது என கூறப்படுகிறது.  கைது செய்யப்பட்ட ஜான் முகமது என்ற சமீர் காலியா என்ற பயங்கரவாதியிடம் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை மும்பைக்கு கொண்டு வரும்படி ஜாகீர் கேட்டுள்ளார்.

ஜான் முகமதுவிடம் நடந்த விசாரணையில் இந்த விவரம் தெரிய வந்துள்ளது.  இதுபற்றி தொடர்ந்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடகாவில் 340 கிலோ போதை பொருள் கடத்தல்; 3 பேர் கைது
கர்நாடகாவில் 340 கிலோ எடை கொண்ட போதை பொருளை கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
2. சொகுசு காரில் ரூ.5 கோடி திமிங்கல உமிழ்நீர் கட்டிகள் பறிமுதல் 5 பேர் அதிரடி கைது
நாகர்கோவில் அருகே சொகுசு காரில்ரூ.5 கோடி மதிப்பிலான திமிங்கல உமிழ்நீர் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
3. விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாக செயல்பட்டவர் கைது
விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாக செயல்பட்டவர் கைது.
4. விசாரணைக்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு வெறிச்செயலில் ஈடுபட்டவர் கைது
விசாரணைக்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டரை அரிவாளால் வெட்டியவரை போலீசார் கைது செய்தனர்.
5. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி
முன்ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.