மத்திய பிரதேசத்தில் இருந்து எம்.பி.யாகிறார் எல். முருகன்


மத்திய பிரதேசத்தில் இருந்து எம்.பி.யாகிறார் எல். முருகன்
x
தினத்தந்தி 18 Sep 2021 6:07 AM GMT (Updated: 18 Sep 2021 6:20 AM GMT)

மத்திய பிரதேசத்தில் இருந்து எம்.பி. பதவிக்கு மத்திய இணை மந்திரி எல். முருகன் தேர்வாகிறார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மேலவை தேர்தலுக்கான வேட்பாளர்களை பா.ஜ.க. அறிவித்து உள்ளது.  இதன்படி, மத்திய மந்திரி சர்பானந்தா சோனோவால் அசாமில் இருந்து வேட்பாளராக தேர்வாகிறார்.

இதேபோன்று மத்திய இணை மந்திரி எல். முருகன் மத்திய பிரதேசத்தில் இருந்து பா.ஜ.க. சார்பில் வேட்பாளராக போட்டியிட்டு தேர்வாகிறார்.

தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவராக எல். முருகன் பதவி வகித்திருந்த காலத்தில் சிறப்புடன் செயல்பட்டதன் தொடர்ச்சியாக, பிரதமர் மோடியின் மந்திரிசபை விரிவாக்கத்தில் மத்திய இணை மந்திரியாக்கப்பட்டார்.

எனினும், நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்படாத சூழலில், மேலவை உறுப்பினர் தேர்தலில் எல். முருகன் போட்டியிடுகிறார்.


Next Story