தேசிய செய்திகள்

இந்தியாவில் 30,773 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி + "||" + Corona infection is confirmed in 30,773 people in India

இந்தியாவில் 30,773 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

இந்தியாவில் 30,773 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 30,773 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2வது அலையின் தீவிரம் சமீப நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.  இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டு உள்ள செய்தியில், கடந்த 24 மணிநேரத்தில் 30,773 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது என்று தெரிவித்து உள்ளது.

இதனால் மொத்த பாதிப்பு 3 கோடியே 34 லட்சத்து 48 ஆயிரத்து 163 ஆக உயர்ந்து உள்ளது.  38,945 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  இதனால் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியே 26 லட்சத்து 71 ஆயிரத்து 167 ஆக உயர்வடைந்து உள்ளது.

நாட்டில் கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் 309 பேர் பலியாகி உள்ளனர்.  மொத்த பலி எண்ணிக்கை 4 லட்சத்து 44 ஆயிரத்து 838 ஆக உயர்வடைந்து உள்ளது.  3 லட்சத்து 32 ஆயிரத்து 158 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  ஒரே நாளில் 85,42,732 கொரோனா தடுப்பூசி டோஸ்கள் என இதுவரை 80 கோடியே 43 லட்சத்து 72 ஆயிரத்து 331 டோஸ்கள் செலுத்தப்பட்டு உள்ளன.


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பாதிப்பு பண்டிகை காலங்களில் அதிகரிக்க கூடும்; மருத்துவர் எச்சரிக்கை
கொரோனா பாதிப்பு பண்டிகை காலங்களில் அதிகரிக்க கூடும் என பொதுமக்களுக்கு மருத்துவர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
2. நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரேவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி
மராட்டிய நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரேவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
3. சென்னையில் கொரோனா பாதிப்பு; இன்று 156 ஆக உயர்வு
சென்னையில் கொரோனா பாதிப்பு நேற்றுடன் ஒப்பிடும்போது, இன்று 156 ஆக உயர்ந்து உள்ளது.
4. ரஷ்யாவில் 33,740 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி
ரஷ்யாவில் 33,740 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.
5. சென்னையில் கொரோனா பாதிப்பு 150 ஆக குறைவு
சென்னையில் கொரோனா பாதிப்பு நேற்றுடன் ஒப்பிடும்போது, இன்று 150 ஆக குறைந்து உள்ளது.