தேசிய செய்திகள்

பஞ்சாப் முதல் மந்திரி பதவியை ஏற்க அம்பிகா சோனி மறுப்பு எனத்தகவல் + "||" + Ambika Soni Refuses Punjab Chief Minister Post After Meeting Rahul Gandhi

பஞ்சாப் முதல் மந்திரி பதவியை ஏற்க அம்பிகா சோனி மறுப்பு எனத்தகவல்

பஞ்சாப் முதல் மந்திரி பதவியை ஏற்க அம்பிகா சோனி மறுப்பு எனத்தகவல்
பஞ்சாப் மாநிலத்தில் பரபரப்பு திருப்பங்களையடுத்து காங்கிரஸ் முதல்-மந்திரி அமரிந்தர் சிங் பதவி விலகினார்.
புதுடெல்லி,

உள்கட்சி பூசல் காரணமாக பஞ்சாப் முதல் மந்திரி பொறுப்பில் இருந்து அமரிந்தர் சிங் நேற்று ராஜினாமா செய்தார். பஞ்சாப் சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், அம்மாநிலத்தின் புதிய முதல் மந்திரி யார்? என்பது குறித்து அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கட்சி தலைவர் சோனியா காந்தி புதிய முதல் மந்திரியை தேர்வு செய்வார் என்று காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. 

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அம்பிகா சோனி முதல் மந்திரி பொறுப்பை ஏற்க மறுத்துவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன. காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி விடுத்த கோரிக்கையை ஏற்க மறுத்த அம்பிகா சோனி, சீக்கியர் அல்லாத முதல் மந்திரி என்றால் பாதிப்புகள் ஏற்படலாம் என்றும் அதனால், தனது பெயரை முதல் மந்திரி பதவிக்கு முன்மொழிய வேண்டாம் எனவும் அம்பிகா சோனி கேட்டுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 


தொடர்புடைய செய்திகள்

1. லகிம்பூர் வன்முறை குறித்து நியாயமான நீதி விசாரணை வேண்டும்; ராகுல் காந்தி டுவிட்
லகிம்பூர் வன்முறை குறித்து நியாயமான நீதி விசாரணை வேண்டும் என்று ராகுல் காந்தி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
2. உத்தர பிரதேச விவசாயிகள் போராட்ட வன்முறை; ஜனாதிபதியை சந்திக்க காங்கிரஸ் முடிவு
உத்தரபிரதேச மாநிலம் லகிம்பூர் கேரி மாவட்டத்தில் கடந்த 3-ந் தேதி போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது கார் மோதியதில் 2 பேர் இறந்தனர்.
3. நீதி கிடைக்கும் வரை சத்தியாகிரகம் தொடரும்: ராகுல் காந்தி
ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா ஆகியோர் உ.பி.யில் உள்ள விவசாயிகளின் குடும்பங்களை நேரில் சந்தித்தனர்.
4. உத்தர பிரதேசத்தில் அமைதியை சீர்குலைக்க ராகுல் காந்தி முயற்சி: பாஜக குற்றச்சாட்டு
லகிம்பூர் வன்முறை தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பாஜக விளக்கம் அளித்துள்ளது.
5. லகிம்பூர் செல்ல ராகுல் காந்திக்கு அனுமதி மறுப்பு
வன்முறையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்க செல்லும் அரசியல்வாதிகளுக்கு உத்தர பிரதேச அரசு அனுமதி அளிக்க மறுத்து வருகிறது.