விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு அனுமதி இல்லை; புனே நகர ஆணையாளர்


விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு அனுமதி இல்லை; புனே நகர ஆணையாளர்
x
தினத்தந்தி 19 Sep 2021 7:59 AM GMT (Updated: 19 Sep 2021 7:59 AM GMT)

மராட்டியத்தில் அரசு விதிகளின்படி, விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்கவில்லை என புனே நகர ஆணையாளர் அமிதாப் குப்தா தெரிவித்து உள்ளார்.


புனே,

மராட்டியத்தில் விநாயகர் சதுர்த்தி திருவிழாவை தொடர்ந்து ஆண்டுதோறும் சிலையை கரைக்கும் பணிகள் நடைபெறுவது வழக்கம்.  இதற்காக பெரிய அளவில் ஊர்வலங்கள் நடத்தப்படும்.

எனினும், நாட்டில் கொரோனா பரவலை முன்னிட்டு கூட்டம் கூடுவதற்கு அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது.  இதில் மராட்டியமும் அடங்கும்.  பொதுமக்கள் பண்டிகைகளை வீட்டிலேயே கொண்டாட மராட்டிய அரசு அறிவுறுத்தி இருந்தது.

இதனால், விநாயகர் சிலை ஊர்வலம் நடத்துவது பற்றிய கேள்வி எழுந்தது.  இந்த நிலையில், புனே நகர ஆணையாளர் அமிதாப் குப்தா கூறும்போது, அரசு விதிகளின்படி, விநாயகர் சிலையை கரைப்பதற்கான ஊர்வலம் நடத்துவjற்கு நாங்கள் யாருக்கும் எந்த அனுமதியும் அளிக்கவில்லை.  இதேபோன்று இந்து அமைப்புகளும் ஊர்வலம் செல்ல வேண்டாம் என்ற முடிவை எடுத்து உள்ளன என தெரிவித்து உள்ளார்.


Next Story