தேசிய செய்திகள்

பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல் மந்திரியாக சரண்ஜித் சிங் சன்னி தேர்வு + "||" + Charanjit Singh Channi to be next Punjab Chief Minister, says Congress

பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல் மந்திரியாக சரண்ஜித் சிங் சன்னி தேர்வு

பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல் மந்திரியாக சரண்ஜித் சிங் சன்னி தேர்வு
பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல் மந்திரியாக சரண்ஜித் சிங் சன்னி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.
அமிர்தசரஸ், 

பஞ்சாப் மாநிலத்தில் முதல்-மந்திரி கேப்டன் அமரிந்தர் சிங்குக்கும், அவரது மந்திரிசபையில் இடம் பெற்றிருந்து, பின்னர் பதவி விலகிய முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத்சிங் சித்துவுக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு நிலவி வந்தது.

அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், சமீபத்தில் நவ்ஜோத்சிங் சித்துவை மாநில காங்கிரஸ் தலைவராக கட்சி மேலிடம் நியமித்தது. இது அமரிந்தர் சிங்குக்கு வேப்பங்காயாக கசந்தது. இதனால் அவருக்கும், நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையேயான மோதல் தொடர்கதையானது. இந்த நிலையில், பஞ்சாப் முதல் மந்திரி பொறுப்பில் இருந்து அமரிந்தர் சிங் நேற்று பதவி விலகினார்.  

இதையடுத்து, பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த முதல் மந்திரி யார்? என்பது குறித்து கட்சி மேலிடம் தீவிர ஆலோசனை நடத்தி வந்தது. இந்த நிலையில், பஞ்சாபின் அடுத்த முதல் மந்திரியாக சரண் ஜித் சன்னி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  

தொடர்புடைய செய்திகள்

1. உள்துறை மந்திரி அமித்ஷாவை இன்று சந்திக்கிறார் பஞ்சாப் முதல் மந்திரி
உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பஞ்சாப் முதல் மந்திரி சரன்ஜித் சிங் சன்னி இன்று சந்தித்துப் பேச உள்ளார்.