கேரளாவில் நவம்பர் 1 முதல் பள்ளிகளை திறக்க முடிவு


கேரளாவில் நவம்பர் 1 முதல் பள்ளிகளை திறக்க முடிவு
x
தினத்தந்தி 19 Sep 2021 12:58 PM GMT (Updated: 19 Sep 2021 12:58 PM GMT)

கேரளாவில் அக்டோபர் 4 ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 1-ந் தேதி 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா பாதிப்பு குறையாமல் இருந்து வந்ததால், அங்கு இதுவரை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை.

கடந்த சில தினங்களாக கேரளாவில் கொரோனா பாதிப்பு ஓரளவு குறைந்து வரும் நிலையில், அங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து முதல்-மந்திரி பினராய் விஜயன் தலைமையில் உயர்மட்ட கொரோனா ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தின் முடிவில் பள்ளிகளில் 1 முதல் 7-ம் வகுப்பு வரையிலான வகுப்புகள், 10 மற்றும் 12-ம் வகுப்புகளை நவம்பர் 1-ம் தேதி திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர மற்ற வகுப்புகளை நவம்பர் 15-ம் தேதி திறக்கலாம் எனவும் இந்த ஆய்வுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த வருடம் பொதுத்தேர்வு எழுதும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களை கருத்தில் கொண்டு பள்ளிகளை திறக்க முடிவு செய்துள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது. அதே சமயம் கேரளாவில் கல்லூரிகள் அக்டோபர் 4 ஆம் தேதி முதல் திறக்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story