கடந்த ஆண்டு சாலை விபத்துகளில் 1.20 லட்சம் பேர் பலி


கடந்த ஆண்டு சாலை விபத்துகளில் 1.20 லட்சம் பேர் பலி
x
தினத்தந்தி 20 Sep 2021 12:50 AM GMT (Updated: 20 Sep 2021 12:50 AM GMT)

கடந்த ஆண்டு சாலை விபத்துகளில் 1.20 லட்சம் பேர் பலியாகியுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

கடந்த ஆண்டின் குற்ற நிலவரம் குறித்த அறிக்கையை தேசிய குற்ற ஆவண காப்பகம் நேற்று வெளியிட்டது. அதன்படி, கடந்த ஆண்டில் கவனக்குறைவாக ஏற்பட்ட சாலை விபத்துகளில் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். நாள் ஒன்றுக்கு சராசரியாக 328 பேர் இறந்துள்ளனர். கடந்த 2018, 2019, 2020 என 3 ஆண்டுகளில் மொத்தம் 3 லட்சத்து 92 ஆயிரம் பேர் விபத்துகளால் இறந்துள்ளனர்.

கடந்த ஆண்டு, வாகனத்தால் மோதி விட்டு தப்பிய சம்பவங்கள் 41 ஆயிரத்து 196 நடந்துள்ளன. ரெயில் விபத்துகளால் 52 பேர் உயிரிழந்துள்ளனர். மருத்துவ அஜாக்கிரதையால் 133 பேரும், உள்ளாட்சி அமைப்புகளின் கவனக்குறைவால் 51 பேரும் பலியாகி உள்ளனர்.

இதர கவனக்குறைவு நிகழ்வுகளால், 6 ஆயிரத்து 367 பேர் இறந்துள்ளனர். கடந்த ஆண்டு, பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறைந்துள்ளதாகவும், ஊரடங்கு விதிமீறல் வழக்குகள் அதிகரித்ததாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Next Story