மோடி அலை மட்டுமே தேர்தலில் வெற்றி பெற உதவாது; எடியூரப்பா சர்ச்சை பேச்சு


மோடி அலை மட்டுமே தேர்தலில் வெற்றி பெற உதவாது; எடியூரப்பா சர்ச்சை பேச்சு
x
தினத்தந்தி 20 Sep 2021 4:02 AM GMT (Updated: 20 Sep 2021 4:20 AM GMT)

மோடி அலை மட்டுமே தேர்தலில் வெற்றி பெற உதவாது என கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா பேசியுள்ளது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.


பெங்களூரு,

கர்நாடகாவில் ஆட்சி செய்து வரும் பா.ஜ.க.வின் முன்னாள் முதல்-மந்திரியாக இருந்தவர் எடியூரப்பா.  கட்சியில் சலசலப்பு ஏற்பட்ட நிலையில், இந்த ஆண்டு ஜூலை 26ந்தேதி தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.

இதனை தொடர்ந்து பசவராஜ் பொம்மை புதிய முதல்-மந்திரியாக கடந்த ஜூலை 28ந்தேதி பொறுப்பேற்று கொண்டார்.

இந்நிலையில், வருகிற 2023ம் ஆண்டு கர்நாடக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.  இதனை முன்னிட்டு எடியூரப்பா கூறும்போது, கர்நாடக சட்டசபை தேர்தலில், மோடி அலை மட்டுமே அதிக தொகுதிகளை கைப்பற்றி வெற்றி பெற உதவாது.  கூட்டு முயற்சியுடன் தேர்தலில் வெற்றி பெற வேண்டியது அவசியம்.

கர்நாடக தேர்தலில் 140 தொகுதிகளுக்கும் கூடுதலாக கைப்பற்ற, மாநில மற்றும் மத்திய தலைவர்கள் கூட்டாக வாக்குகளை கைப்பற்ற முயற்சிக்க வேண்டும்.  இந்த தேர்தலில் உள்ளூர் தலைவர்களின் பங்கு அதிகம் இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.

எனினும், கடந்த காலங்களில் பல்வேறு மாநிலங்களில் பா.ஜ.க. அதிக தொகுதிகளை கைப்பற்றுதல், ஆட்சியை தக்க வைத்து கொள்ளுதல் ஆகியவற்றுக்கு பிரதமர் மோடி அலை துணை புரிந்தது.  இந்த நிலையில், மோடி அலை மட்டுமே தேர்தலில் வெற்றி பெற உதவாது என கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா பேசியுள்ளது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.


Next Story