இந்தியாவில் 30 ஆயிரத்திற்கு கீழ் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு


இந்தியாவில் 30 ஆயிரத்திற்கு கீழ் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 21 Sep 2021 4:23 AM GMT (Updated: 21 Sep 2021 4:23 AM GMT)

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 26,115 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.




புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா 2வது அலையில் அதிக பாதிப்புகள் காணப்பட்டன.  இந்த நிலையில், சமீப நாட்களாக கொரோனா பாதிப்புகள் ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது.

இந்நிலையில், மத்திய மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டு உள்ள செய்தியில், இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 26,115 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளது.

இந்த எண்ணிக்கை நேற்று முன்தினம் 30,570 ஆகவும், நேற்று 34,403 ஆகவும் பதிவாகி இருந்தது.  இதனால் மொத்த பாதிப்பு 3,34,78,419ல் இருந்து 3,35,04,534 ஆக உயர்வடைந்து உள்ளது.

ஒரே நாளில் 34,469 பேர் குணமடைந்து சென்றுள்ளனர்.  இதனால் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை  3,27,49,574 ஆக உயர்வடைந்து உள்ளது.  கடந்த 24 மணிநேரத்தில் 252 பேர் உயிரிழந்து உள்ளனர்.  இதனால், மொத்த உயிரிழப்பு 4,45,385 ஆக உயர்ந்து உள்ளது.


Next Story