தேசிய செய்திகள்

நாடு முழுவதும் செலுத்திய கொரோனா தடுப்பூசி டோஸ்கள் 81.85 கோடி + "||" + The corona vaccine doses paid across the country were 81.85 crore

நாடு முழுவதும் செலுத்திய கொரோனா தடுப்பூசி டோஸ்கள் 81.85 கோடி

நாடு முழுவதும் செலுத்திய கொரோனா தடுப்பூசி டோஸ்கள் 81.85 கோடி
இந்தியாவில் இதுவரை 81.85 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டு உள்ளன.புதுடெல்லி,

நாட்டில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டு வருகின்றன.  கடந்த ஜனவரியில் தொடங்கிய இந்த பணியில் முன்கள மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டன.

தொடர்ந்து கடந்த ஜூனில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த அரசு அனுமதி அளித்தது.  நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 96,46,778 கொரோனா தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டு உள்ளன.

நாட்டில், இதுவரை மொத்தம் 81.85 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டு உள்ளன.  தமிழகத்தில் இதுவரை 4,32,10,314 கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டு உள்ளன.


தொடர்புடைய செய்திகள்

1. மெகா தடுப்பூசி முகாம்: 20.05 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி - சுகாதாரத்துறை தகவல்
மெகா தடுப்பூசி முகாமில் இதுவரை 20.05 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
2. மராட்டியத்தில் கொரோனா தடுப்பூசி போடாமல், சான்றிதழ் வந்ததால் வாலிபர் அதிர்ச்சி
2-வது டோஸ் தடுப்பூசி போடும் முன்பே, வாலிபருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி போட்டதாக செல்போனுக்கு குறுந்தகவல் வந்தது.அதில் இருந்த லிங்கை கிளிக் செய்த போது, வாலிபர் 2 டோஸ் தடுப்பூசியும் போட்டதற்கான சான்றிதழ் பதிவிறக்கமானது.
3. கொரோனா தடுப்பூசியில் சாதனை! - 100 கோடி இலக்கை எட்டிய இந்தியா
தடுப்பூசி இயக்கம் தொடங்கப்பட்ட 85 நாட்களில் முதல் 10 கோடி (100 மில்லியன்) டோஸ் வழங்கப்பட்டதாக அரசாங்கம் கூறி உள்ளது.
4. குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி தேவையில்லை - மருத்துவ நிபுணர்கள் கருத்து
குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி தேவையில்லை என்று மருத்துவ நிபுணர்கள் கூறி உள்னர்.
5. வரும் 23 ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம்; அமைச்சர் மா.சுப்பிரமணியன்
50 ஆயிரம் முகாம்களில் சனிக்கிழமை 6-ம் கட்ட கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.