கொல்கத்தாவில் கனமழை அரசு மருத்துவமனைக்குள் புகுந்த வெள்ள நீர்


கொல்கத்தாவில் கனமழை அரசு மருத்துவமனைக்குள் புகுந்த வெள்ள நீர்
x
தினத்தந்தி 21 Sep 2021 7:33 AM GMT (Updated: 21 Sep 2021 7:33 AM GMT)

கொல்கத்தாவில் பெய்த கனமழையால் மருத்துவமனைக்குள் வெள்ள நீர் புகுந்தது. இதனால் நோயாளிகள் அவதிக்குள்ளானார்கள்.

கொல்கத்தா

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மழை  நீர் தாழ்வான பகுதிகளில் வெள்ளமாக ஓடுகிறது.கொல்கத்தாவின் பல பகுதிகள் வெள்ல நீரில் மூழ்கியுள்ளன இதனால் போக்குவரத்து சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.14 ஆண்டுகளுக்கு பிறகு கொல்கத்தாவில் செப்டம்பர் மாதத்தில் அதிக மழை பெய்து உள்ளது.

கொல்கத்தாவின்  மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்குள் வெள்ள நீர் புகுந்தது. இதனால் நோயாளிகள் அவதிக்குள்ளானார்கள். மழை நீரை  வெளியேற்றும் பணி நடந்து வருகிறது. கீழ் தளத்தில் உள்ள மருந்து சேமிக்கும் அறைக்குள் வெள்ள நீர் புகுந்து அங்குள்ள பொருட்களை சேதப்படுத்தியது. 

இதுகுறித்து மருத்துவமனை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

எங்கள் வளாகம் முழுவதும் வெள்ள நீரால்  மூழ்கியுள்ளது. தரைதளத்தில் வைக்கப்பட்டிருந்த ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் பல உயிர் காக்கும் மருந்துகளை மழைநீர் சேதப்படுத்தியுள்ளது. 

இதனால் மருந்துகள்  சேமிக்க முடியாமல் போனது. நாங்கள் தண்ணீரை வெளியேற்ற முயற்சி செய்து வருகிறோம். ஆனால் மீண்டும் கனமழை பெய்தால் நிலைமை இன்னும் மோசமடைந்துவிடும்’. இவ்வாறு அவர் கூறினார்.

அங்கு அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி)   மேற்கு வங்காளத்தின்  அனைத்து மாவட்டங்களிலும்  இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று கணித்துள்ளது.

14 ஆண்டுகளுக்கு பிறகு கொல்கத்தாவில் செப்டம்பர் மாதத்தில் அதிக மழை பெய்து உள்ளது.

Next Story