லே நகரில் புதிய விமான நிலைய முனையம் 2022- இறுதிக்குள் செயல்பாட்டுக்கு வரும்: மத்திய அரசு


லே நகரில் புதிய விமான நிலைய முனையம் 2022- இறுதிக்குள் செயல்பாட்டுக்கு வரும்: மத்திய அரசு
x
தினத்தந்தி 21 Sep 2021 10:43 AM GMT (Updated: 21 Sep 2021 10:43 AM GMT)

லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள லே நகரில் அடுத்த ஆண்டு இறுதிக்குள் புதிய விமான நிலைய முனையம் செயல்பட்டுக்கு வரும் என்று மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தார்.

லே, 

லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள லே நகரில் அடுத்த ஆண்டு இறுதிக்குள் புதிய விமான நிலைய முனையம் செயல்பட்டுக்கு வரும் என்று மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தார். லடாக் யூனியன் பிரதேசத்தின் துணை நிலை கவர்னர் ஆர்கே மாதுர் உடனான காணொலி ஆலோசனையின் போது ஜோதிராதித்ய சிந்தியா இந்த தகவலை தெரிவித்தார். 

லே நகரில் கூடுதல் விமான தளங்கள் அமைப்பது குறித்து விமான போக்குவரத்தின் தொழில்நுட்ப குழு விரைவில் லடாக் வர உள்ளதாகவும் சிந்தியா தெரிவித்தார்.விமான டர்பைன் எரிபொருளுக்கான வாட் வரியை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்  ஜோதிராதித்ய சிந்தியா லடாக் துணை நிலை ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தார். 

அதேபோல், குளிர்காலத்தில் விமான கட்டணத்தை ஒழுங்குமுறைப்படுத்துதல், ஏர் ஆம்புலன்ஸ் இயக்கம் மற்றும் லே நகருக்கு இரவு நேர விமானங்களை இயக்குவதற்கான சாத்தியக்கூறுகள் ஆகிய விவகாரங்களில் தலையிட வேண்டும் எனவும்  மத்திய மந்திரி ஜோதிராதித்ய சிந்தியாவிடம் துணை நிலை ஆளுநர் கோரிக்கை விடுத்தார். 

Next Story