தேசிய செய்திகள்

உணவு பாதுகாப்பு குறியீடு: எந்த இடத்தில் தமிழ்நாடு? + "||" + Gujarat, Kerala and Tamil Nadu top FSSAI food safety index for 2020-21

உணவு பாதுகாப்பு குறியீடு: எந்த இடத்தில் தமிழ்நாடு?

உணவு பாதுகாப்பு குறியீடு: எந்த இடத்தில் தமிழ்நாடு?
உணவு பாதுகாப்பு குறியீடு பட்டியலில் தமிழகத்திற்கு மூன்றாவது இடம் கிடைத்து உள்ளது.
புதுடெல்லி

பொதுமக்களுக்கு பாதுகாப்பான உணவை உறுதி செய்வதில் உணவுப்பாதுகாப்பு மற்றும் தர  நிர்ணயம் ஆணையம் சார்பில், ஆண்டுதோறும் உணவு பாதுகாப்பு குறியீடு வெளியிடப்படுகிறது. அந்த வகையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அவர்கள் இது தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், பெரிய மாநிலங்களின் பட்டியலில் குஜராத் முதலாவது இடத்திலும், கேரளா 2-வது இடத்திலும், தமிழகம் மூன்றாவது இடத்திலும்  உள்ளது.

மேலும், சிறிய மாநிலங்களுக்கான பட்டியலில் கோவா முதலிடத்திலும், மேகாலயா இரண்டாவது இடத்திலும், மணிப்பூர் 3-வது இடத்திலும் உள்ளது.