பிரான்ஸ் அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு


பிரான்ஸ் அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு
x
தினத்தந்தி 21 Sep 2021 1:25 PM GMT (Updated: 21 Sep 2021 1:25 PM GMT)

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக பேசினார்.

புதுடெல்லி,

இந்திய பிரதமர் மோடி இன்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேலுன் தொலைபேசி வாயிலாக பேசினார். அப்போது இருவரும் ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலை, போதைப்பொருள்,  பயங்கரவாதம்,  பெண்கள் உரிமை, சிறுபான்மையினர் பிரச்சினை குறித்த கவலை போன்றவை குறித்து விவாதித்ததாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.  அதேபோல் ஜி 20 மாநாடு போன்ற பல தரப்பு உச்சி மாநாட்டில் ஒத்துழைப்புடன் செயல்படுவதற்கும் ஒப்புக்கொண்டனர்.

மேலும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இருநாட்டின் ஒத்துழைப்பு குறித்து ஆய்வு செய்தனர். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இருநாட்டின் ஆலோசனைகள் அப்படியே நீட்டிக்க இருவரும் ஒப்புக்கொண்டனர். கோவேக்ஸ் திட்டத்தின் கீழ் மீண்டும் தடுப்பூசியை ஏற்றுமதி செய்ய இந்திய முடிவெடுத்திருப்பதை பிரான்ஸ் அதிபர் வரவேற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story