தேசிய செய்திகள்

18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கோவேக்சின் தடுப்பூசி பரிசோதனை நிறைவு + "||" + Bharat Biotech completes trial of paediatric Covaxin

18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கோவேக்சின் தடுப்பூசி பரிசோதனை நிறைவு

18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கோவேக்சின் தடுப்பூசி பரிசோதனை நிறைவு
18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கோவேக்சின் தடுப்பூசி செலுத்தி பரிசோதிக்கும் சோதனை நிறைவடைந்துள்ளது.
ஐதராபாத், 

பெரியவர்களுக்கான கோவேக்சின் தடுப்பூசியை ஐதராபாத் பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கி, தயாரித்து வினியோகித்து வருகிறது. இந்தநிலையில் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான கோவேக்சின் தடுப்பூசியையும் இந்த நிறுவனம் உருவாக்கி உள்ளது. இந்த தடுப்பூசியை குழந்தைகளுக்கு செலுத்தி பரிசோதிக்கும் 2, 3-ம் கட்ட பரிசோதனை முடிந்துள்ளது.

இதையொட்டி பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ணா இலா கூறுகையில், பீடியாட்ரிக் கோவேக்சின் தடுப்பூசி தற்போதுதான் 2, 3-ம் கட்ட பரிசோதனையை நடத்தி முடித்துள்ளது. இந்த பரிசோதனையின்போது 1000 குழந்தைகளுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட்டுள்ளது. செயல்திறன் உள்பட பல்வேறு தரவுகளை சேகரிக்கும் பணி நடக்கிறது. அடுத்த வாரம் இந்த தரவுகளை மருந்து கட்டுப்பாட்டு அமைப்புக்கு சமர்ப்பிப்போம் என குறிப்பிட்டார்.

அடுத்த மாதத்தில் கோவேக்சின் தடுப்பூசி உற்பத்தி அளவு 5½ கோடியை எட்டும் எனவும் அவர் தெரிவித்தார். நடப்பு செப்டம்பர் மாதத்தில் கோவேக்சின் தடுப்பூசி உற்பத்தி அளவு 3½ கோடி டோஸ் ஆகும்.

தொடர்புடைய செய்திகள்

1. குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி: அவசரப்பட விரும்பவில்லை- மத்திய சுகாதார மந்திரி
குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசியை வழங்குவதில் அரசாங்கம் அவசரப்பட விரும்பவில்லை என்று மத்திய சுகாதார மந்திரி தெரிவித்துள்ளார்.
2. மழை வெள்ளத்தில் சிக்கித்தவித்த குழந்தைகள், முதியோர்கள் உள்பட 430 பேர் மீட்பு
தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளத்தில் சிக்கித்தவித்த முதியோர்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 430 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
3. போபாலில் உள்ள மருத்துவமனையின் குழந்தைகள் வார்டில் தீ விபத்து: மீட்பு பணிகள் தீவிரம்...!
போபாலில் உள்ள மருத்துவமனை ஒன்றின் குழந்தைகள் வார்டில் தீ விபத்து நிகழ்ந்துள்ளது. தற்போது மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
4. அமெரிக்காவில் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி
அமெரிக்காவில் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு எப்.டி.ஏ. அங்கீகாரம் அளித்துள்ளது.
5. சீன தலைநகரில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது
சீன தலைநகரில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது.