புதிய விமானப்படை தளபதியாக விவேக்ராம் சவுத்ரி நியமனம்


புதிய விமானப்படை தளபதியாக விவேக்ராம் சவுத்ரி நியமனம்
x
தினத்தந்தி 22 Sep 2021 2:22 AM GMT (Updated: 22 Sep 2021 2:22 AM GMT)

புதிய விமானப்படை தளபதியாக விவேக்ராம் சவுத்ரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

புதுடெல்லி, 

இந்திய விமானப்படை தளபதியாக ஆர்.கே.எஸ். பதாரியா இருந்து வருகிறார். இவர் வருகிற 30-ந் தேதியுடன் பணி ஓய்வு பெறுகிறார்.

இதனையடுத்து புதிய விமானப்படை தளபதியாக விவேக்ராம் சவுத்ரியை நியமித்து உள்ளதாக மத்திய பாதுகாப்பு துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விவேக்ராம் சவுத்ரி தற்போது விமானப்படை துணை தளபதியாக இருந்தவர்.

Next Story