நாடு முழுவதும் புதிதாக 26 ஆயிரத்து 964 பேருக்கு கொரோனா பாதிப்பு


நாடு முழுவதும் புதிதாக 26 ஆயிரத்து 964 பேருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 22 Sep 2021 4:14 AM GMT (Updated: 22 Sep 2021 4:14 AM GMT)

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 26,964 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிச்செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி, 

கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலையில் இருந்து முற்றிலும் விடுபடுவதற்கு இந்தியா முழுவீச்சில் போராடி வருகிறது.

இந்த நிலையில் கொரோனா நோயாளி ஒருவர், எத்தனை பேருக்கு கொரோனாவை பரப்புகிறார் என்கிற பரவல் அளவு, நடப்பு செப்டம்பர் மாதம் மிகவும் குறைந்து வருவது சாதகமான அம்சமாக பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில்  இந்தியாவில் ஒரே நாளில் 26,964 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது.  நேற்று முன் தினம் 34,403 நேற்று 26,115 என பதிவான நிலையில் இன்று 26,964 பேருக்கு பாதிப்படைந்துள்ளனர். 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3,35,04,534 லிருந்து 3,35,31,498 ஆக உயர்ந்துள்ளது.   ஒரே நாளில் 34,167 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.  குணமடைந்தோர் எண்ணிக்கை 3,27,49,574 லிருந்து 3,27,83,741 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3,01,989 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

ஒரே நாளில் கொரோனாவுக்கு 383 பேர் உயிரிழந்துள்ளனர்.  இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை  4,45,385 லிருந்து 4,45,768 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 97.77% உயிரிழப்பு விகிதம் 1.33% ஆக உள்ளது. 

மத்திய சுகாதார அமைச்சகம் இந்த புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது.

Next Story