தேசிய செய்திகள்

சித்துவை வெற்றி பெற விடமாட்டேன்: அமரிந்தர் சிங் ஆவேசம் + "||" + Will Pit Strong Candidate, Won't Let Navjot Sidhu Win": Amarinder Singh

சித்துவை வெற்றி பெற விடமாட்டேன்: அமரிந்தர் சிங் ஆவேசம்

சித்துவை வெற்றி பெற விடமாட்டேன்: அமரிந்தர் சிங் ஆவேசம்
சித்து முதல் மந்திரி ஆவதை தடுக்க எந்த தியாகத்தையும் செய்வேன் என பஞ்சாப் முன்னாள் முதல் மந்திரி அமிரீந்தர்சிங் தெரிவித்துள்ளார்.
சண்டிகர்,

சித்து முதல் மந்திரி ஆவதை தடுக்க எந்த தியாகத்தையும் செய்வேன் என பஞ்சாப் முன்னாள் முதல் மந்திரி அமிரீந்தர்சிங் தெரிவித்துள்ளார்.

உள்கட்சி பூசல் காரணமாக பஞ்சாப் முதல் மந்திரி பொறுப்பில் இருந்து விலகிய அமரிந்தர் சிங்,  அம்மாநில காங்கிரஸ் தலைவர் சித்து முதல் மந்திரியாக தேர்வு செய்யப்படுவதை தவிர்க்க எந்த தியாகத்தையும் செய்ய தயார் என்று ஆவேசமாக தெரிவித்தார். 

இது தொடர்பாக அமரிந்தர் சிங் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளிக்கையில்  கூறியதாவது:- பஞ்சாப்பிற்கு மிகவும் ஆபத்தானவர் சித்து.  வரப்போகும் சட்டசபை தேர்தலில் சித்து முதல் மந்திரி  ஆவதை தடுக்க எந்த தியாகத்தையும் நான் செய்வேன். 

சித்துவுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டால் அவருக்கு எதிராக பலம் வாய்ந்த வேட்பாளரை நிறுத்துவேன். மூன்று வாரங்களுக்கு முன்பாக நான் ராஜினாமா செய்ய இருப்பதாக கூறிய போது, தொடர்ந்து பதவியில் நீடிக்குமாறு சோனியா காந்தி என்னை கேட்டுக்கொண்டார். ராகுல் காந்தியும்  பிரியங்கா காந்தியும் அனுபவமற்றவர்கள். அவர்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள்” என்றார். 

தொடர்புடைய செய்திகள்

1. முழு நேர காங்கிரஸ் தலைவராக இருக்க தயார்... ஆனால்...! - சோனியாகாந்தி பேச்சு
நாட்டின் பொருளாதாரம் மிக மோசமாக இருப்பதற்கு அடையாளம் தான் பல ஆண்டுகளாக சேமித்த இந்திய சொத்துக்களை விற்கும் மத்திய அரசின் முடிவு என சோனியாகாந்தி கூறினார்.
2. வெல்டிங் பற்றவைப்பு பெட்டி வெடித்து நான்கு ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் காயம்
மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்களில் ஒருவர் - ஒரு தலைமை காவலர் - ராய்பூரில் உள்ள நாராயணா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
3. காங்.ஆளும் மாநிலங்களில் தலித்துகளுக்கு எதிராக கொடுமை: ராகுல்,பிரியங்கா மவுனம் காப்பது ஏன்?- பாஜக கேள்வி
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் தலித்துகளுக்கு எதிராக கொடுமை நடக்கும் போது அது குறித்து ஏன் ராகுலும் பிரியங்காவும் மவுனம் காக்கின்றனர் என பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.
4. பஞ்சாப்பை தொடர்ந்து... சத்தீஸ்கரிலும் காங்கிரஸ் கலாட்டா...?
பஞ்சாப்பை தொடர்ந்து... சத்தீஸ்கரிலும் காங்கிரஸ் தலைவர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.
5. காங்கிரசில் இணையும் கன்னையா குமார் - ஜிக்னேஷ் மேவானி
பீகார் அரசியலில் கன்னையா குமார் முக்கிய பங்கு வகிக்க விரும்புவதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.