மும்பையில் நேற்று புதிதாக 488 பேருக்கு கொரோனா பாதிப்பு


மும்பையில் நேற்று புதிதாக 488 பேருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 22 Sep 2021 9:33 PM GMT (Updated: 22 Sep 2021 9:33 PM GMT)

மும்பையில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து உள்ளது.

மும்பை,

மராட்டிய மாநிலத்தின் தலைநகர் மும்பையில் நேற்று புதிதாக 488 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதனால் மும்பையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7 லட்சத்து 39 ஆயிரத்து 364 ஆக உயர்ந்தது. கொரோனாவினால் பாதிக்கப்பட்ட 4 பேர் நேற்று உயிரிழந்தனர். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 63 ஆக உயர்ந்தது.

நேற்று முன்தினம் மும்பையில் 352 பேருக்கு தான் பாதிப்பு கண்டறியப்பட்டது. அந்த எண்ணிக்கையை விட நேற்று கூடுதலாக 136 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில் 40 ஆயிரத்து 484 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதனால் பரிசோதனை எண்ணிக்கை 1 கோடியே 59 லட்சத்து 254 ஆக உயர்ந்தது.

தற்போது மும்பையில் 4 ஆயிரத்து 706 பேர் கொரோனா தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். 359 பேர் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு சென்றனர். மும்பையில் கொரோனா பாதித்த 46 கட்டிடங்கள் சீல் வைக்கப்பட்டு உள்ளது. மீட்பு விகிதம் 97 சதவீதமாகவும், நோயின் இரட்டிப்பாகும் காலம் 1,187 நாட்களாகவும் உள்ளது. நடப்பாண்டில் அதிகபட்சமாக கடந்த ஏப்ரல் மாதம் 4-ந் தேதி 11 ஆயிரத்து 163 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story