கேரளாவில் 1-ந் தேதி முதல் 1 முதல் 7-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு


கேரளாவில் 1-ந் தேதி முதல் 1 முதல் 7-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு
x
தினத்தந்தி 23 Sep 2021 4:27 AM GMT (Updated: 23 Sep 2021 4:27 AM GMT)

கேரளாவில் 1-ந் தேதி முதல் 1 முதல் 7-ம் வகுப்பு வரை பள்ளிக்கூடம் திறக்கப்படுகிறது.

திருவனந்தபுரம், 

திருவனந்தபுரத்தில் முதல்-மந்திரி பினராயி விஜயன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அடுத்த மாதம் (அக்டோபர்) 1-ந் தேதி முதல், 1 முதல் 7 வரை மற்றும் 10, 12-ம் வகுப்புகள் தொடங்கப்படும். 15-ந் தேதி முதல் மற்ற வகுப்புகள் ஆரம்பமாகும். இதையொட்டி பள்ளிகளில் பராமரிப்பு பணிகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

அதே போல் பள்ளி குழந்தைகளுக்கு சுகாதார பாதுகாப்பு உறுதி செய்யப்படும். முக கவசம் அணிவதில் இருந்து விலக்கு அளிக்க முடியாது. வியாபார நிறுவனங்கள், பொது இடங்களில் சிலர் முக கவசம் அணியாமல் இருப்பது தெரிய வந்தால் தண்டிக்கப்படுவார்கள். 

கேரளாவில் இதுவரை 3.44 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. 24 லட்சம் பேர் இதுவரை ஒரு டோஸ் தடுப்பூசி கூட எடுத்து கொள்ளவில்லை. கொரோனா பாதித்து சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர்கள் 3 மாதங்களுக்கு பிறகு தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். 65 வயதிற்கு மேலானவர்கள் உடனடியாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story