தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் கிராம மக்களை மிரட்டி வந்த பயங்கரவாதி சுட்டுக்கொலை + "||" + An encounter breaks out at Kashwa area of Shopian Police & Security Forces are undertaking the operation.

ஜம்மு காஷ்மீரில் கிராம மக்களை மிரட்டி வந்த பயங்கரவாதி சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரில் கிராம மக்களை மிரட்டி வந்த பயங்கரவாதி சுட்டுக்கொலை
ஜம்மு-காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் கிராம மக்களை மிரட்டி வந்த பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார்.
ஜம்மு,

ஜம்மு-காஷ்மீர் சோபியான் மாவட்டத்தில் காஷ்வாவில் அருகே உள்ள  சித்ராகம் காலன் பகுதியில் பயங்கரவாதி ஒருவர் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி கிராம மக்களை மிரட்டி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்புப் படையினர் மற்றும் போலீசார் அந்த பகுதியை சுற்றிவளைத்து மற்றும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது பயங்கரவாதி பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதையடுத்து பக்கத்து வீடுகளில் இருந்த மக்களை பத்திரமாக வெளியேற்றிவிட்டு, பயங்கரவாதி மீது தாக்குதலை தொடர்ந்தனர்.

பின்னர், தான் சரணடைவதாக தெரிவித்தார், ஆனால் அவர் சரணடையவில்லை. பின்னர், பாதுகாப்புப் படையினர் நடத்திய தூப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார்.

சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதி அனயத் அஷ்ரப் தார் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார், அவரிடம் இருந்து ஒரு கைத்துப்பாக்கி மற்றும் வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன, 

அவர் ஏற்கனவே போதைப்பொருள்கள் கடத்தலில் ஈடுபட்டு வந்ததாகவும், தற்போது பயங்கரவாதியாக மாறியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.