தேசிய செய்திகள்

பெகாசஸ் - நிபுணர் குழு அமைத்து விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு முடிவு + "||" + CJI NV Ramana says the Supreme Court is setting up a Technical Expert Committee to inquire into the alleged Pegasus snooping row

பெகாசஸ் - நிபுணர் குழு அமைத்து விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு முடிவு

பெகாசஸ் - நிபுணர் குழு அமைத்து விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு முடிவு
பெகாசஸ் உளவு விவகாரம் குறித்து விசாரிக்க உள்ள நிபுணர் குழு பற்றி அடுத்த வாரம் முடிவு எடுக்கப்படும் என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி, 

இஸ்ரேல் அரசு தயாரித்த பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் நாட்டில் அரசியல் கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், நீதிபதிகள் உள்ளிட்ட பலரது செல்போன்கள் ஒட்டுகேட்கப்பட்டன. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையாக ஏற்படுத்தியது. 

இந்த விவகாரம் தொடர்பாக  பெகாசஸ் ஒட்டுக்கேட்பு குறித்து நிபுணர் குழு அமைத்து விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு முடிவு செய்துள்ளது.  நிபுணர் குழு தொடர்பாக அடுத்த வாரம் விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என தலைமை நீதிபதி ரமணா தெரிவித்துள்ளார்.