தேசிய செய்திகள்

மேற்குவங்காளம்: ஆம்னி பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 6 பேர் பலி + "||" + Bengal: 6 migrant labourers, returning to work, killed as bus falls in ditch

மேற்குவங்காளம்: ஆம்னி பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 6 பேர் பலி

மேற்குவங்காளம்: ஆம்னி பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 6 பேர் பலி
மேற்குவங்காளத்தில் ஆம்னி பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் 6 பேர் உயிரிழந்தனர்.
கொல்கத்தா,

மேற்குவங்காள மாநிலத்தின் வடக்கு தினஜ்பூர் மாவட்டத்தில் இருந்து உத்தரபிரதேசம் நோக்கி நேற்று இரவு ஆம்னி பஸ் சென்றுகொண்டிருந்தது. 

அந்த பஸ்சில் மேற்குவங்காளம், ஜார்க்கண்ட் மாநிலங்களை சேர்ந்த 20 புலம்பெயர் தொழிலாளர்கள் பயணித்தனர். அவர்கள் உத்தரபிரதேசத்தில் உள்ள தொழிற்சாலைக்கு பணிபுரிய சென்றுகொண்டிருந்தனர்.

வடக்கு தினஜ்பூர் மாவட்டம் ராய்கன்ஞ் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த புலம்பெயர் தொழிலாளர்கள் 6 பேர் உடல்நசுங்கி உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மேற்குவங்காளம்: தேர்தலுக்கு பிந்தைய வன்முறை தொடர்பான விசாரணை அறிக்கை ஐகோர்ட்டில் தாக்கல்
மேற்குவங்காளத்தில் தேர்தலுக்கு பிந்தைய வன்முறைகள் தொடர்பான விசாரணையின் தற்போதைய நிலையை அறிக்கையாக ஐகோர்ட்டில் சிபிஐ தாக்கல் செய்துள்ளது.
2. நான் முதல்-மந்திரியாக தொடரவேண்டுமானால் மழை பெய்தாலும் வாக்களிக்க வாருங்கள்; மம்தா பேச்சு
நான் முதல்-மந்திரியாக தொடர வேண்டுமானால் மழை பெய்தாலும் வீட்டை விட்டு வெளியே வந்து எனக்கு வாக்களிக்களியுங்கள் என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
3. மேற்குவங்காள பா.ஜ.க. தலைவராக சுகந்த மஜூம்தர் நியமனம்
மேற்குவங்காள பா.ஜ.க. தலைவராக சுகந்த மஜூம்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
4. மேற்குவங்காளம்: 130 குழந்தைகளுக்கு திடீர் உடல்நலக்குறைவு - மருத்துவமனையில் அனுமதி
மேற்குவங்காளத்தில் உள்ள ஜல்பைகுரி மாவட்டத்தில் காய்ச்சல், வயிற்றுப்போக்கு பாதிப்புடன் 130 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
5. நிதி நிறுவன ஊழியர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி 12 கிலோ தங்கம் கொள்ளை
மேற்குவங்காளத்தில் தனியார் நிதி நிறுவன ஊழியர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி 12 கிலோ தங்கத்தை கொள்ளையடித்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.