தேசிய செய்திகள்

கர்நாடகா: பட்டாசு குடோனில் வெடிவிபத்து - 2 பேர் பலி + "||" + Two people killed in a blast at a firecracker storage facility in Karnataka

கர்நாடகா: பட்டாசு குடோனில் வெடிவிபத்து - 2 பேர் பலி

கர்நாடகா: பட்டாசு குடோனில் வெடிவிபத்து - 2 பேர் பலி
கர்நாடகாவில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூரு நியூ தரகுபேட் என்ற பகுதி உள்ளது. இப்பகுதியில் பட்டாசு சேமித்து வைக்கும் குடோன் உள்ளது. அந்த குடோனில் பல்வேறு ரக பட்டாசுகள் சேமித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அந்த பட்டாசு குடோனில் இன்று காலை திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதனால், குடோனில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் அனைத்தும் வெடித்து சிதறின.

இந்த வெடிவிபத்தில் சிக்கி பட்டாசு குடோன் அருகே நின்றுகொண்டிருந்த 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 3 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

தொடர்புடைய செய்திகள்

1. 45 வயதானவரை திருமணம் செய்த இளம்பெண்
துமகூருவில் 45 வயதானவரை 25 வயது இளம்பெண் திருமணம் செய்த சம்பவம் நடந்துள்ளது.
2. கர்நாடகத்தில் போலீஸ் நிலையங்களை காவி மயமாக்க அரசு முயற்சி- டி.கே.சிவக்குமார் குற்றச்சாட்டு
கர்நாடகத்தில் போலீஸ் நிலையங்களை காவி மயமாக்க அரசு முயற்சி செய்வதாக டி.கே.சிவக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
3. கர்நாடகாவில் மதமாற்ற தடை சட்டத்தில் பாதிரியார் கைது
கர்நாடக மாநிலம் உப்பள்ளியில் மதமாற்ற தடை சட்டத்தில் பாதிரியார் கைது செய்யப்பட்டுள்ளார்.
4. கர்நாடகாவில் தொடக்கப்பள்ளிகள் திறப்பு: முதல்வர் அறிவிப்பு
கர்நாடகாவில் தொடக்கப்பள்ளிகள் வரும் அக்டோபர் 25 முதல் திறக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
5. கர்நாடகத்தில் நிதிநிலை சீரானால் பெட்ரோல்-டீசல் விலை குறைக்கப்படும் - பசவராஜ் பொம்மை அறிவிப்பு
கர்நாடகத்தில் நிதி நிலை நன்றாக இருந்தால் பெட்ரோல்-டீசல் விலையை குறைக்க வாய்ப்பு உள்ளதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.